ஐஇஎல்டிஎஸ் தேர்வை வெற்றியாக்க வேண்டுமா? | Kalvimalar - News

ஐஇஎல்டிஎஸ் தேர்வை வெற்றியாக்க வேண்டுமா?

எழுத்தின் அளவு :

ஆங்கிலம் பேசும் நாடுகளில் படிக்க அல்லது பணி செய்ய அல்லது வாழ விரும்பும் நபர்களுக்கு, அவர்களின், ஆங்கிலப் புரிந்துணர்வு மற்றும் பயன்பாட்டுத் திறனை சிறப்பாக அளவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ஐஇஎல்டிஎஸ் தேர்வு.

கவனித்தல், படித்தல், எழுதுதல் மற்றும் பேசுதல் ஆகிய மொழியின் 4 அம்சங்களிலும் இத்தேர்வு கவனம் செலுத்துகிறது. IELTS மட்டுமே, நேருக்கு நேர் பேசும் தேர்வு முறையைக் கொண்டுள்ளது. இதன்மூலம், தேர்வர், தனது ஆங்கிலத் திறனை சிறப்பாக வளர்த்துக் கொள்ள முடிகிறது.

மனப்பாடம் செய்யாதீர்கள்

இத்தேர்வில், Essays அல்லது Scripts போன்றவைகளை எழுதும் பொருட்டு, ஏற்கனவே யாரேனும், எதிலாவது எழுதியுள்ளவைகளை மனப்பாடம் செய்யும் பழக்கம், தேர்வர்கள் மத்தியில் உள்ளது. இது கட்டாயம் தவிர்க்க வேண்டிய ஒரு செயல்.

ஏனெனில், தேர்வாளர்கள்(examiner), ஒரு விஷயம் சுய மொழி நடையில் எழுதப்பட்டதா அல்லது மனப்பாடம் செய்து எழுதப்பட்டதா என்பதை சுலபமாக கண்டுபிடிக்கும் அளவிற்கு மொழி அனுபவம் பெற்றவர்கள் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது. மனப்பாடம் செய்து எழுதுபவர்கள், எப்போதுமே, தேர்வில் தேர்ச்சி பெற முடியாது.

சிறப்பாக கற்கவும்

ஆங்கில மொழியை வேண்டுமளவிற்கு சிறப்பாக கற்றுக்கொள்ளவும். முடிந்தளவிற்கு, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வாசிக்கவும், எழுதவும் மற்றும் பேசவும். இதன்மூலம்தான், உங்களின் திறமை மெருகேறும்.

ஒவ்வொரு பிரிவுக்கும் தயாராகுங்கள்

* கேள்விகளை கவனமாகப் படித்து, Keywords -ஐ அடிக்கோடிட்டு, பிறகு பதிலளிக்கவும்.

* கவனிக்கும்போது, கேள்வித்தாளின் மீது, பதில்களின் குறிப்பெழுதவும்.

* ஒரே நேரத்தில், படித்தல், எழுதுதல் மற்றும் கவனித்தலை மேற்கொள்ளவும்.

* அடிக்கடி, பேசுபவர், பதிலைத் தருவார். பிறகு அதை திருத்தவும் மற்றும் கவனமாக இருக்கவும்.

* தலைப்பானது(topic), கடினமாக இருப்பதாகவும், பேசுபவர் விரைவாக பேசுவதாகவும் நீங்கள் உணர்ந்தால், ரிலாக்ஸ் செய்துகொண்டு, கவனத்தில் இருக்கவும்.

எழுதுதல் ஆலோசனைகள்

* Keywords -ஐ highlight செய்வது மற்றும் வட்டமிடுவது போன்றவற்றை மேற்கொள்ளவும்.

* பதிலை எழுதும் முன்பாக, அதை திட்டமிடவும்.

* தலைப்பிலிருந்து விலகாமல் செயல்படவும்.

* ஒரு பாராகிராப் - ஒரே எண்ணம்

* குறைந்தபட்சம், தேவையான வார்த்தைகளை நீங்கள் எழுதியுள்ளீர்களா என்பதை உறுதிசெய்யவும்.

* எழுத்துப்பிழை, குறியீடுகள் மற்றும் இலக்கணப் பிழை ஆகியவற்றை சோதிக்க, போதுமான நேரமுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

பேசுதல் ஆலோசனைகள்

* ரிலாக்சாக இருக்கவும். தேர்வாளரின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை தெளிவாக கவனிக்கவும்.

* கேள்விகளுக்கு, முழு பதில்களை வழங்கவும்.

* தேர்வாளரை விட, அதிகம் பேசுவதற்கு திட்டமிடவும்.

* உங்களின் உரையைத் திட்டமிட, தயாராகும் நேரத்தைப் பயன்படுத்தவும்.

* தேர்வுக்கு முன்னதாக, 2 நிமிடங்கள் முழுமையாகப் பேச பயிற்சியெடுக்கவும்.

பொது அறிவுரைகள்

* எழுத்துப் பிழை வராமல் எழுதுவது மிகவும் முக்கியம்.

* முறையற்ற மொழிநடை, சுருக்க எழுத்துமுறை, ஏற்பற்ற பேச்சு வழக்கு போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* எந்தக் கேள்விக்கும் பதில் எழுதாமல் விட வேண்டாம். ஏனெனில் தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. எனவே, யூகத்தில் எழுதும் பதில்களுக்கும் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.

* மொத்தத்தில் பதற்றமடைய வேண்டாம். எது நடந்தாலும் அமைதியாக இருக்கவும். ரிலாக்சாக இருந்து, செய்வதை சிறப்பாக செய்யவும்.

மாணவர்கள் அடிக்கடி செய்யும் தவறுகள்

* மனப்பாட முறையில் தேர்வுக்கு தயாராவது

* உண்மையான ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக, வெறும் தேர்வு நோக்கில் மட்டுமே தயாராவது.

* நேரத்தை முறையாக நிர்வகிக்காதது(குறிப்பாக படிப்பதில்). ஒட்டுமொத்த புரிந்துணர்வும், தேவையான குறிப்பட்ட தகவலைத் திரட்டும் திறனும் இல்லாதிருப்பது.

* எழுதுதல் பிரிவுகளில், கேள்வியின் அனைத்துப் பகுதிகளுக்கும் விடையளிக்காமல் இருப்பது. ஏனெனில், ஏதேனும் ஒரு பகுதிக்கு விடையளிக்காமல் விட்டாலும், ஒட்டுமொத்த கேள்விக்கும் பதிலளிக்காமல் விட்டதாய் புரிந்துகொள்ளப்பட்டு, அதிக மதிப்பெண்களை இழக்க வேண்டியிருக்கும்.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us