ஜிஆர்இ தேர்வை வெற்றிகரமாக எழுத... | Kalvimalar - News

ஜிஆர்இ தேர்வை வெற்றிகரமாக எழுத...

எழுத்தின் அளவு :

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கானோர், ஜிஆர்இ தேர்வை எழுதுகின்றனர். அத்தகைய தேர்வர்கள், பலவிதமான கலாச்சார மற்றும் கல்விப் பின்னணியிலிருந்து வருகிறார்கள். எனவே, இத்தேர்வு, ஒரு பொது அளவீட்டைத் தருகிறது.

ஜிஆர்இ மதிப்பெண்கள், முதுநிலை, எம்பிஏ, சிறப்பு முதுநிலைப் படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் போன்ற பலவித படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பயன்படுத்தப்படுகின்றன. அந்த தேர்வை சிறப்பாக எழுத சில ஆலோசனைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

GRE Revised General Test தேர்வை எழுதும் முன்பாக, www.takethegre.com  என்ற வலைத்தளத்திற்கு சென்று, Content of verbal reasoning, quantitative reasoning and analytical writing sections ஆகியவற்றைப் பற்றி நன்றாக அறிந்து கொள்ளவும்.

www.takethegre.com/prep. இணையதளத்தில் கிடைக்கும் இலவச மெட்டீரியல்களை பயன்படுத்திக் கொள்ளவும். தேர்வு நெருங்கும் நேரத்தில், ஒரு சிறந்த பயிற்சியைப் பெற, சமீபத்தில் வெளியிடப்பட்ட POWERPREP II Software(version 2.0) -ஐ டவுன்லோடு செய்யவும். 2 முழு அளவிலான பயிற்சி தேர்வுகள், வியூகங்கள், மாதிரி கேள்விகள் மற்றும் இன்னபிற அம்சங்கள் போன்றவை அதில் உள்ளடங்கியுள்ளன.

Verbal reasoning மற்றும் Quantitative reasoning ஆகிய பிரிவுகளில் கேட்கப்படும் கேள்விகள், பலவிதமான முறைகளில் கேட்கப்படுகின்றன. சிலவற்றுக்கு, ஒரே பதிலை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும், வேறு சிலவற்றுக்கோ ஒன்றுக்கும் மேற்பட்டவைகளைத் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும். இன்னும் சிலவற்றுக்கு பல பதில்களைத் தேர்வுசெய்ய வேண்டியிருக்கும். பதிலளிக்கும் முன்பாக, கேள்வியை மிக நன்றாகப் புரிந்துகொள்வது அவசியம்.

GRE Revised General Test தேர்வானது, உங்களின் சுய தேர்வு வியூகத்தை பயன்படுத்தி எழுதும் விதத்தில் அமைந்துள்ளது. ஒரே பிரிவுக்குள், பதிலை மாற்றவோ, திருத்தவோ, அடுத்தவற்றுக்கு செல்லவோ, மீண்டும் கேள்விக்குத் திரும்பவோ, உங்களால் முடியும். Quantitative reasoning பிரிவில் இருக்கும் on-screen calculator, ஒரு கூடுதல் வசதி.

Verbal reasoning மற்றும் Quantitative reasoning மதிப்பெண்கள், எத்தனை கேள்விகளுக்கு சரியாக விடையளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமைகிறது. இப்பகுதியில், மதிப்பெண்களை அதிகப்படுத்திக் கொள்ள, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பதே சிறந்தது. தவறான கேள்விகளுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது என்பதால், தயங்காமல், தெரியாத கேள்விகளுக்கும், யூகித்து விடையளிக்கவும்.

Quantitative reasoning பகுதியில், பல கேள்விகள், எளிமையாகவே கேட்கப்பட்டிருக்கும். எனவே, கால்குலேட்டர் இருக்கிறது என்பதற்காக, அதை தேவையின்றி பயன்படுத்த வேண்டாம். long divisions, square roots, addition, subtractions or multiplication of numbers போன்ற விஷயங்களுக்கு மட்டுமே அவற்றைப் பயன்படுத்தவும். இதன்மூலம் நேரத்தை சேமிக்கலாம்.

Analytical writing பிரிவை எழுதும்போது, உங்களின் நேர மேலாண்மையில் கவனமாக இருக்கவும். கேள்வியின் தன்மையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, பதிலை திட்டமிட்டு, Essay -ஐ தொகுக்கவும்.

உயர்கல்விக்காக தேர்ந்தெடுத்த கல்வி நிறுவனத்திற்கு, எந்த மதிப்பெண்களை அனுப்ப வேண்டும் என்று GRE தேர்வர்கள் முடிவுசெய்ய, ScoreSelectSM உதவுகிறது. மேலும், தேர்வை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் அது உதவுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us