பாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா? | Kalvimalar - News

பாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கெமிக்கல் இன்ஜினியரிங்கை பயன்படுத்தி பாலிமர் தயாரிப்பில் ஈடுபடும் இத் துறையின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்த வருகிறது. அமெரிக்காவில் உள்ள 50 சதவீத கெமிக்கல் இன்ஜினியர்கள் பாலிமர் இன்ஜினியரிங்கில் தான் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலும் பாலிமர் தொழிற்சாலைகள் அதிக அளவில் திறக்கப்படுகின்றன.

பாலிமர் இன்ஜினியர்கள் குவாலிடி கன்ட்ரோல் இன்ஸ்பெக்டராகவும், புரடக்ஷன் பிளானராகவும், மோல்ட் டிசைனராகவும் பாலிமர் தொழிற்சாலைகளில் பணி புரிகிறார்கள். அரசுத் துறையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்கள், ஆய்வகங்கள், பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங் பிளாண்டுகள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், பாலிமர் கழகங்கள் என பல்வேறு இடங்களில் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

இயற்கை மூலப் பொருட்களின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதால் பாலிமர் துறை இந்திய அரசின் முன்னுரிமைத் துறையாக விளங்குகிறது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us