திறன் மேம்பாடுதான் ஒரே வழி! | Kalvimalar - News

திறன் மேம்பாடுதான் ஒரே வழி!ஜனவரி 13,2018,12:58 IST

எழுத்தின் அளவு :

இந்த புத்தாண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், டிஜிட்டல் இந்தியா சூடுபிடித்துள்ள இன்றைய நிலையில், அத்துறையில் 50 சதவீத கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும், என்றும் நிபுணர்கள், மதிப்பிட்டுள்ளனர்!

சர்வதேச அளவில், டிஜிட்டல், ரோபாட்டிக்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் ஆகிய துறைகளில், வரும் 2020க்குள் புதியதாக 23 லட்சம் பணி வாய்ப்புகள் உருவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பல்வேறு தொழில் துறைகளில் ‘ஆட்டோமேஷன்’ நடைபெறுவதால், சில துறைகளில் வேலை இழப்புகளும் நிகழும்! இன்றைய வேலை வாய்ப்பு சந்தையில், ‘ஆர்டிபிசியல் இன்டெலிஜன்ஸ்’ முக்கிய பங்கு வகிக்கத் துவங்கியுள்ளதால், பணியாளர்கள் அனைவரும், அவர்களது பணித் திறன்களை மேம்படுத்திக் கொள்வதே, வேலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்றும், நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்!

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us