’ஐடியா’க்கள் பிறக்க தனித்திருங்கள்! | Kalvimalar - News

’ஐடியா’க்கள் பிறக்க தனித்திருங்கள்!டிசம்பர் 15,2017,11:28 IST

எழுத்தின் அளவு :

உங்களுக்கு ’கிரியேட்டிவிட்டி ’அதிகரிக்க வேண்டுமா? சமுதாயத்தை விட்டு அவ்வப்போது விலகி தனிமையில் இருங்கள்!


ஆம்! ’சுற்றுப்புறத்தாரிடம் இருந்தும், நண்பர்கள் வட்டத்தில் இருந்தும் அவ்வப்போது விலகி இருந்தால், புத்தாக்க சிந்தனை மேலோங்கி, புதுப்புது ஐடியாக்கள் தோன்றுகிறது’ என்று அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியை ஜூலி பவ்கர், ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளார்.


தனிமையில் இருக்கும் கலைஞர்களுக்கு புதிய ஐடியாக்கள் உருவாவது போல், அவ்வப்போது தனிமையில் அதிக நேரம் இருக்கும் எவர் ஒருவருக்கும் புத்தாக்க சிந்தனை மேலோங்குகிறது, என்கிறார் அவர்.


இதுவரை தனிமையில் அதிக நேரம் இருப்பவர்களது மனநிலை குறித்து, எதிர்மறையான கருத்துக்களே பெரும்பாலும் பகிரப்பட்டு வந்த நிலையில், இந்த ஆய்வின் முடிவு சற்று சிந்திக்கத்தான் வைக்கிறது!

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us