டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாரா? | Kalvimalar - News

டிஜிட்டல் மாற்றத்திற்கு தயாரா?மே 24,2017,15:35 IST

எழுத்தின் அளவு :

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சி, பிற துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் வேலை உருவாக்கம் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

உதாரணமாக, ‘பாக்ஸ்கான்’ என்ற மின்னணு உற்பத்தி நிறுவனம், அறுபதாயிரம் தொழிலாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை பணியில் ஈடுபடுத்து உள்ளது, ‘டிஜிட்டல்’ குறித்து சிந்திக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது! ‘டிஜிட்டல்’ தங்களது பணியின் போக்கை அடுத்த மூன்று ஆண்டுகளில் மாற்றி அமைத்துவிடும் என்று 73 சதவீத ஊழியர்கள் உணவர்தாக, அக்சென்ஞ்சர் நிறுவன ஆய்வு கூறுகிறது.

டிஜிட்டல் டிரான்பார்மேசன்
ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியை அடுத்து, குறிப்பிட்ட வளர்ச்சி வேகத்தை பெற்றுள்ளது டிஜிட்டல் தொழில்நுட்பம். சமூக ஊடகங்கள் முதல் மின் பரிவர்த்தனை வணிகம் (இ-காமர்ஸ்) வரை மக்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறும் நிறுவனங்கள், தங்கள் போட்டி நிறுவனங்களை விட 26 சதவீதம் லாபத்தை பெருக்கி கொள்கின்றன. அதே சமயம், 9 சதவீத வருவாயை தங்களது ஊழியர்கள் மூலம் பெறுகின்றன.

வருவாயில் ஏற்றம் காண்பதற்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை திறமையாக செயல்முறைபடுத்த வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு பெரும்பாலான நிறுவனங்கள், புராடெக்ட் அண்ட் சர்வீஸ், மார்கெட்டிங் போன்ற தொழில் பகுதிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளன.

வேலைகளை தக்கவைக்க
தற்போது நிறுவனங்களில், இளம் வயதையுடைய 50 சதவீதம் பேர் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்களில் முக்கிய உயர் பொறுப்புகளை இளைஞர்கள் பிடித்துவருகின்றனர். தற்போதைய் டிஜிட்டல் மாற்றத்திற்கான திறன் அவர்களிடம் இருப்பது இதற்கு முக்கிய காரணம்.பல முன்னணி நிறுவனங்கள், தலைமைப் பண்பு திறமையுடன், டிஜிட்டல் தொழில்நுட்ப திறன் பெற்றவர்களை பணியமர்த்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. எனவே, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அதனைப் பயன்படுத்தும் முறைகள் உள்ளிட்ட தேவைப்படும் அடிப்படை திறன்கள் பற்றின விவரங்களை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

டிஜிட்டல் திறமை
இன்று பல நிறுவனங்கள், டிஜிட்டல் மார்கெட்டிங், டேட்டா சயின்ஸ், பிசினஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகின்றன. அதனால், இளம் பட்டதாரிகள் மற்றும் தற்போதுள்ள பணியாளர்கள், தங்களது டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவைக் கட்டாயம் மேம்படுத்தினால் மட்டுமே, திறமைகளை நிரூபிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஐ.சி.டி., எனும் தகவல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பத் திறன் 90 சதவீத பணிகளுக்கு தேவை என்ற நிலை உருவாகி வருகிறது. மொபிலிட்டி, வணிகம் நுண்ணறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிக் டேட்டா உள்ளிட்டவற்றில் திறன் பெற வேண்டும். எனவே, ஆளுமை திறனுடன், காலத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தொழில்நுட்ப திறன்களை வளர்த்து கொண்டு, அனைத்து துறைகளிலும் சாதிக்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்!

-அர்ஜுன் ஷங்கர், தலைவர் - கார்ப்ரேட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்,  என்.ஐ.ஐ.டி., லிமிடெட்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us