மருத்துவ மாணவர்களுக்கு சித்த மருத்துவ மாணவர்கள் ஆதரவு | Kalvimalar - News

மருத்துவ மாணவர்களுக்கு சித்த மருத்துவ மாணவர்கள் ஆதரவுசெப்டம்பர் 27,2013,08:26 IST

எழுத்தின் அளவு :

திருநெல்வேலி: பயிற்சி டாக்டர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நெல்லை மருத்துவக்கல்லூரி பயிற்சி டாக்டர்கள் நேற்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை அருகே அரசு பஸ்சில் பயணிகளிடம் நகைகளை பறித்த கன்னியாகுமரியை சேர்ந்த வக்கீல் பென்சாம் 43, சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் நெல்லை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இரவில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு பணியில் இருந்த பயிற்சி டாக்டர்களை தாக்கியுள்ளார். ஏற்கனவே இதுபோல ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

எனவே டாக்டர்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று நெல்லை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்துவிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டனர்.

மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2016 www.kalvimalar.com.All rights reserved | Contact us