உலகளவில் சிறந்த பல்கலை பட்டியல்: 222வது இடத்தில் டில்லி ஐ.ஐ.டி., | Kalvimalar - News

உலகளவில் சிறந்த பல்கலை பட்டியல்: 222வது இடத்தில் டில்லி ஐ.ஐ.டி.,செப்டம்பர் 12,2013,07:45 IST

எழுத்தின் அளவு :

டில்லி: உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம் வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ஐ.ஐ.டி.,க்கு, 222வது, இடம் கிடைத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், "குவாகுரேலி சைமண்ட்ஸ்" என்ற நிறுவனம், கடந்த, 2004ல் இருந்து, உலகளாவிய அளவில் உள்ள பல்கலைகளை ஆய்வு செய்து, ஆண்டுதோறும், தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. 10வது ஆண்டாக, பல்கலைகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில், அமெரிக்காவின், மாசேசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலை (massachusetts institute of technology) 2வது ஆண்டாக, முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஹார்வர்டு பல்கலை, இரண்டாவது இடத்தையும், கேம்பிரிட்ஜ் பல்கலை, மூன்றாவது இடத்தையும் பிடித்து, சாதனை படைத்துள்ளன. முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகளில் ஒன்றுக்கு கூட இடம் இல்லை.

டில்லி, ஐ.ஐ.டி., 222வது இடம் பிடித்துள்ளது. மும்பை, ஐ.ஐ.டி.,க்கு, 233வது இடமும், சென்னை, ஐ.ஐ.டி.,க்கு, 313வது இடமும் கிடைத்துள்ளன. ஆசிய நாடுகள் என்ற அளவில் எடுத்துக்கொண்டால், சீன பல்கலைகள், அதிகம் இடம் பிடித்துள்ளன.

ஆசிய அளவில், ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை, முதலிடத்தை பிடித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலை, ஹாங்காங் பல்கலை ஆகிய இரண்டும், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. சியோல் தேசிய பல்கலை, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

டில்லி, ஐ.ஐ.டி., 38; மும்பை, ஐ.ஐ.டி., 39; சென்னை, ஐ.ஐ.டி., 49; கான்பூர், ஐ.ஐ.டி., 51; காரக்பூர், ஐ.ஐ.டி., 58; ரூர்க்கி, ஐ.ஐ.டி., 66 மற்றும் டில்லி பல்கலைக்கு 80வது இடமும் கிடைத்துள்ளன. ஆசியாவில், சீனா, தைவான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் பல்கலைகள், அதிக இடங்களை பிடித்துள்ளன.

இந்தியாவில், நாடு முழுவதும், 600க்கும் அதிகமான பல்கலைகள் உள்ளன. மத்திய அரசு, உயர் கல்விக்காக, பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்கிறது. இருந்தபோதும், உலகளாவிய தர வரிசையில், முதல், 100 இடங்களில் கூட, ஒரு பல்கலையும் இடம் பெறாதது, அனைத்து நிலைகளிலும், உயர் கல்வியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை, எடுத்துக் காட்டுகிறது.


வாசகர் கருத்து

ஐயா, சேகர் அவர்களே, இந்தியாவில் கடந்த பல நூற்றாண்டுகளாக இடஒதுக்கீடு இருந்துவருகிறது. அதனால், ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆட்கள் மட்டுமே பயன்பெற்றனர். ஆனால், அனைத்து மக்களும் அனைத்தையும் பெற வேண்டும் என்ற உயரிய மானுட நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த புதிய இடஒதுக்கீட்டு முறை. இன்றைய படித்த இளைஞர்களுக்கு முற்றிலும் சமூக அறிவே இருப்பதில்லை. அதனால்தான், அவர்கள் இடஒதுக்கீட்டை, தகுதி, திறமை என்ற போலியான பிரச்சாரங்களுக்கு மயங்கி, தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இந்தியாவில், தகுதி, திறமை என்பவை, ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அதாவது சாதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுபவை என்பதை மறந்துவிட வேண்டாம். உண்மையான தகுதி, திறமை உடையவர்கள், தங்களின் பிறப்பின் அடிப்படையில் பலகாலமாக ஒதுக்கப்பட்டே வருகிறார்கள் இந்த நாட்டில்.
by manudan,India    13-செப்-2013 10:13:26 IST
ஐயா, சேகர் அவர்களே, இந்தியாவில் கடந்த பல நூற்றாண்டுகளாக இட ஒதுக்கீடு இருந்துவருகிறது. அதனால், ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆட்கள் மட்டுமே பயன்பெற்றனர். ஆனால், அனைத்து மக்களும் அனைத்தையும் பெற வேண்டும் என்ற உயரிய மானுட நோக்கத்தில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த புதிய இடஒதுக்கீட்டு முறை. இன்றைய படித்த இளைஞர்களுக்கு முற்றிலும் சமூக அறிவே இருப்பதில்லை. அதனால்தான், அவர்கள் இடஒதுக்கீட்டை, தகுதி, திறமை என்ற போலியான பிரச்சாரங்களுக்கு மயங்கி, தொடர்ந்து எதிர்க்கிறார்கள். இந்தியாவில், தகுதி, திறமை என்பவை, ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அதாவது சாதியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுபவை என்பதை மறந்துவிட வேண்டாம். உண்மையான தகுதி, திறமை உடையவர்கள், தங்களின் பிறப்பின் அடிப்படையில் பலகாலமாக ஒதுக்கப்பட்டே வருகிறார்கள் இந்த நாட்டில்.
by manudan,India    13-செப்-2013 10:12:24 IST
இட ஒதிக்கீடு இருக்கிறவரைக்கும் இந்தியாவிலுள்ள எந்த ஒரு துறையும் உருப்படாது.
by சேகர்,India    12-செப்-2013 22:18:13 IST
நம் இலட்சியம் தரனமான கல்வியோ முதல் இடமோ அல்ல.. எந்த மதிப்பெண் எடுத்த மாணவனுக்கும் முடிந்த அளவு இடஒதுக்கீடு செய்வதே நம் இலட்சியம்.
by அழகன்,India    11-செப்-2013 23:18:20 IST
ஜாதி, லோக்கல் பாலிடிக்ஸ், ஈகோ, மொழி பிரிவினை வாதம் ஆகியவை களைந்தால் தான் இந்திய கல்வி நிறுவனங்கள் முன்னேற்ற பாதையில் செல்லும். இல்லாவிட்டால் தன இனத்திற்காக மட்டும் சலுகைகளை காட்டி தன இனத்தை மட்டும் மேம்படுத்தி மேற்கத்திய நாடுகளுக்கு பார்சல் செய்யும் ஆதிக்க புத்திகாரர்களின் அட்டகாசம் அடங்காது. இதற்க்கு கோடி கோடியாக மக்கள் பணம் செலவு மற்றும் இவர்களுக்கு அந்தஸ்து, விக்ஞானிகள் என்ற பேருடன் சமுதாய மதிப்பு, குடும்பத்திற்கே சேர்த்து பல சலுகைகள் வேறு. சி தூ..ஏழை நாட்டில் இவர்கள் அடிக்கும் கும்மாளம் எப்போது வெளிச்சத்திற்கு வந்து அடங்கும்?
by மார்கண்டேயுலு,India    11-செப்-2013 21:57:57 IST
நான் டெய்லி படிப்பது .
by தமிழ் செல்வன் ,India    11-செப்-2013 20:55:11 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us