வானொலியில் வாய்ப்புகள் ஏராளம்! | Kalvimalar - News

வானொலியில் வாய்ப்புகள் ஏராளம்!அக்டோபர் 24,2016,17:43 IST

எழுத்தின் அளவு :

துறையில் நுழைதல்
எலக்ட்ரானிக் மிடியா, விசுவல் கமியூனிகேஷன், மாஸ் கமியூனிகேஷன், சவுன்ட் அன்ட் ஆடியோ இன்ஜினியரிங் போன்ற ஏதேனும் ஒரு படிப்பில் இளநிலை, முதுநிலை அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றவர்களுக்கு வானொலி துறையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தொகுப்பாளர் ஆக குறிப்பிட்ட பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிறந்த தகவல் பரிமாற்றும் திறன் பெற்றிருந்தால் போதுமானது. அதுமட்டுமின்றி இசை துறையில், ஞானம் பெற்றவர்களும் வானொலி துறையில் சாதிக்கலாம்!

பணி பிரிவுகள்

வானொலி தொகுப்பாளர்:  வானொலி என்றவுடனே அனைவருக்கும் நினைவில் வருவது ‘ரேடியோ ஜாக்கி’ (ஆர்ஜே) எனப்படும் தொகுப்பாளர் பணி தான். தொகுப்பாளர்கள் குரல் வளம், மொழித் திருத்தம், பொது அறிவு, உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ளும் திறமை, அதனை நேயர்களிடம் தெளிவான மொழி நடையில் கொண்டு சேர்க்கும் ஆற்றல் போன்றவற்றை பெற்றிருப்பது மிகவும் அவசியம்.

சவுன்ட் இன்ஜினியர்: வானொலி நிலையங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான அடையாளங்களை உருவாக்கி கொடுப்பவர் தான் ‘சவுன்ட் இன்ஜினியர்’. விளம்பர பாடல்கள் மற்றும் பிற வணிக பயன்பாடுகளுக்காக, ‘ஜிங்கில்ஸ்’ எனப்படும் குறுகிய பாடல்களை உருவாக்குவதும் இவர்களே!

சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்: வணிக நிறுவனங்கள் மட்டுமின்றி அனைத்து வகை சிறுதொழில் மற்றும் ஊடக நிறுவனங்களின் லாபத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிப்பது ‘சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங்’ குழு தான். விளம்பரதாரர்களிடம் இருந்து வணிக ரீதியான விளம்பரங்களை பெறுவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

இசை மேலாளர் (மியூசிக் மேனேஜர்): பயணங்களிலும், தனிமையிலும் நமது செவிகளுக்கு விருந்தளிக்கும் வானொலியில் இசை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. நேயர்களின் விருப்பத்திற்கும், நேரங்களுக்கு ஏற்றவாறும் இசைகளை ஒளிபரப்புவது, காலங்களுக்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்வது போன்ற வேலைகளை செயல்படுத்துகின்றனர் இசை ஆய்வாளர்கள் மற்றும் இசை மேலாளர்கள்.

புரோகிராமிங் டீம்: ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான திட்டங்களை வகுப்பது, ஷோ புரோடியூசர், அசிஸ்டன்ட் ஷோ புரோடியூசர், கிரியேட்டீவ் ஹெட்ஸ் அன்ட் எக்சிகியூட்டிவ், கன்டன்ட் ரையிட்டர்ஸ், காப்பி ரையிட்டர்ஸ், புரொமோ புரோடியூசர் உள்ளிட்ட பல பிரிவுகளில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் (புரோகிராமிங் டீம்) பணியாற்றுகின்றனர். நேயர்களின் தேவைகளுக்கு ஏற்ப, தினமும் ஒரு புது வகையான தலைப்பில் நிகழ்ச்சிகளை வடிவமைத்து, வனொலி தொகுப்பாளர்களுடன் இணைந்து செயலாற்றுகின்றனர்.

எந்தப் பிரிவாக இருந்தாலும், தங்களை மெறுகேற்றிக் கொள்ள, எதையும் மாற்றி சிந்திக்கும் கற்பனை திறன் பெற்றிருப்பது அவசியம்!

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us