ஹாங்காங்கில் படிக்க முடியுமா? அது பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ஹாங்காங்கில் படிக்க முடியுமா? அது பற்றிக் கூறவும்.ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

படிப்பறிவின்மையை நீக்க முனைப்புடன் பல முயற்சிகளை எடுத்து பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கும் நாடு சீனா. கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் கல்வி வெகுவாக மேம்பட்டிருக்கிறது. சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கிலும் கல்வி பயில முடியும். 1075 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்டிருக்கும் ஹாங்காங்கில் அரசின் நிதி உதவி பெறும் 8 பல்கலைகழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஹாங்காங் பல்கலைக்கழகம் உட்பட புகழ் பெற்ற பிற பல்கலைக்கழகங்களும் உள்ளன.

வெளிநாட்டவர் விசா பெறுவது முதற் படி. சீனாவின் தூதரகங்களில் இதைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். இதன் கல்வி நிறுவனங்களில் விடுதி வசதியைப் பெறுவது தான் சிரமமாக இருக்கிறது. எதற்காக ஹாங்காங்கில் படிக்க விரும்புகிறோம் என்ற விளக்கக் கட்டுரையைத் தர வேண்டியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் நம் நாட்டில் படித்திருக்கிறோம், ஆங்கிலத் திறன் எப்படி மற்றும் பொதுவாக தொடக்கம் முதல் எப்படிப் படித்திருக்கிறோம் போன்றவை படிப்புக்கான அனுமதி தரப்பட மதிப்பிடப்படுகிறது. ஆங்கிலத் திறனறிய டோபல்/..எல்.டி.எஸ். தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பயன்படும். விண்ணப்பக் கட்டணம் தோராயமாக ரூ.1000. ஆண்டுக்குக் கல்விக் கட்டணம் ரூ.5 லட்சம். பட்ட மேற்படிப்பு என்றால் ஆண்டுக்கு ரூ.8 லட்சம்.

வெளிநாட்டினர் இந்தியா வந்து படிக்க விரும்பும் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் ஹாங்காங் சென்று படிப்பது அவசியம் தானா? இதற்கான வசதி நம்மிடம் உள்ளதா என்பதை யோசித்து அதற்கேற்ப முடிவு எடுக்கவும்.

விரைவில் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில்

சேரவிருக்கும் நான் குறிப்பிட்ட கல்லூரியானது

அங்கீகரிக்கப்பட்டது தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

மார்ச் 17 அன்று ராஜ்ய சபாவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை ஸ்டேட் அமைச்சர் கூறியது போல இன்று இந்தியாவில் பல கல்லூரிகளும் அவற்றுக்கான அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான ரூபாயை கட்டி 4 ஆண்டுகள் கழித்து அந்தப் படிப்பு அங்கீகரிக்கப்படவில்லை என அறிவது எப்படி கொடுமையானது? எனவே ஏ..சி.டி.இயால் அங்கீகரிக்கப்படாத கல்லூரியை அடையாளம் காணுவது மிக முக்கியம். இதை அதன் இன்டர்நெட் தளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இன்டர்நெட் முகவரி : www.Aicte.Ernet.In

இன்ஸ்டிடியூட் ஆப் ரயில் டிரான்ஸ்போர்ட் நடத்தும் படிப்புகளைப் பற்றிக் கூறுங்கள்.

குணசீலன், கோவை

டில்லியில் உள்ளது இந்த நிறுவனம். இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருப்பவருக்கான ஒரு ஆண்டு படிப்பை இது நடத்துகிறது. இதில் +2 முடித்து 3 ஆண்டுகள் அரசு நிறுவனம் ஒன்றில் அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் பணி அனுபவம் பெற்றிருப்பவரும் சேர முடியும்.

இது 2 படிப்புகளை நடத்துகிறது. டிரான்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் என்ற படிப்பையும் மல்டி மோடல் டிரான்ஸ்போர்ட் கன்டெயினரைசேசன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் என்னும் படிப்பையும் இது நடத்துகிறது. பொதுவாக இவை பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகின்றன. ஏப்ரல்/மே வரை கூட இதில் சேரும் வாய்ப்பும் தரப்படுகிறது. கட்டணம் தோராயமாக ரூ.2200. முழு விபரங்களைப் பெற முகவரி:

Institute of Rail Transport Admission 2008
Room No. 17, Rail Bhavan,
Raisina Road,
New Delhi110001

தொலைபேசி:

23384171, 23303236,23303924, 23304147

Fax No :  911123384005,

இமெயில்:

irt@nde.vsnl.net.in

இன்டர்நெட் முகவரி : www.irtindia.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us