விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளோருக்கு அருமையான வாய்ப்புகள் | Kalvimalar - News

விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளோருக்கு அருமையான வாய்ப்புகள்ஜூலை 31,2013,09:43 IST

எழுத்தின் அளவு :

இன்றைய நிலையில், விளையாட்டுத் துறை பணிகள், நல்ல சம்பளம் கிடைக்கக்கூடியவைகளாக திகழ்கின்றன. ஒருவர், விளையாட்டு விஞ்ஞானி, பத்திரிகையாளர், பள்ளியில் தேர்ந்த விளையாட்டு பயிற்சியாளர், விளையாட்டு சார்ந்த ஊட்டச்சத்து நிபுணர் உள்ளிட்ட பலவிதமான பணிகளைப் பெறலாம்.

விளையாட்டுத் துறையில், ஆராய்ச்சி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன மற்றும் விளையாட்டு ஆணைய மையங்கள், வாய்ப்புகளை வழங்க திறந்து கிடக்கின்றன. மேலும், பயிற்சிபெற்ற பட்டதாரிகளுக்கு, பெரியளவிலான ஸ்போர்ட்ஸ் கிளப்புகள், ஜிம்கள் மற்றும் பிட்னஸ் மையங்கள் ஆகியவை, பல்வேறான வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன.

கல்வியைத் தொடங்குதல்

இந்தியா முழுவதும், பலவிதமான உடற்பயிற்சி கல்வி கல்லூரிகள் செயல்படுகின்றன. பள்ளிப் படிப்பை முடித்த ஒருவர், 3 அல்லது 4 ஆண்டுகளைக் கொண்ட ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை, விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளலாம்.

பிசிகல் எஜுகேஷன் துறையில் இளநிலைப் படிப்பிற்கான சேர்க்கை நடைமுறைகள், பல்கலைகளுக்கிடையே வேறுபட்டாலும், படிப்பின் அடிப்படைகள் அனைத்திலும் ஒன்றுதான். இப்படிப்பில் சேரும் ஒரு மாணவர், அகடமிக் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் விளையாட்டுத் திறன் தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார்.

அகடமிக் தேர்வில், அடிப்படை பொது அறிவு, ஆங்கிலத் திறன் ஆகியவை மதிப்பிடப்படும். மற்ற இரண்டு தேர்வுகளிலும், உடல் தகுதிதான் சோதிக்கப்படும். சில சமயங்களில், நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை போன்றவையும் நடத்தப்படும். இப்படிப்பில் சேர, கட்டயாம் விளையாட்டுப் பின்னணியை வைத்திருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், அது இருந்தால், முன்னுரிமை தரப்படும்.

படிப்பு - ஒரு அலசல்

பிசிகல் எஜுகேஷன் என்பது பலவிதமான பாடங்களை உள்ளடக்கிய ஒன்றாகும். இதுவொரு பன்முகத்தன்மை வாய்ந்த படிப்பாகும். இப்படிப்பில், பிசியாலஜி, ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட், மருத்துவம், சைக்காலஜி, ஒழுங்கு விதிமுறைகள், சுகாதார கல்வி, பயிற்சி முறைகள், கோச்சிங் மற்றும் பயோமெக்கானிக்ஸ் உள்ளிட்ட பேப்பர்கள் அடங்கியுள்ளன.

தியரி மற்றும் பிராக்டிகல் ஆகிய இரண்டுமே கலந்துள்ள இந்தப் பாடத்தைப் படிக்கும் மாணவர்கள், இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இடைய பாடத்திட்டங்களில் 30% அளவிற்கு வேறுபாடுகள் இருக்கும்.

படிப்பின்போது, பிட்னஸ் பயிற்சி, neuromuscular திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் வளர்ப்பு பயிற்சி போன்றவை வழங்கப்படும். மேலும், ஒரு குழுவை எப்படி வழிநடத்துவது மற்றும் மற்றவர்களுக்கு எப்படி ஆலோசனை வழங்குவது போன்றவைகளையும கற்றுக்கொள்ளலாம்.

பணி வாய்ப்புகள்

இந்த தொழில்துறைகளில் இருக்கும் பண நடைமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. ஏனெனில், ஒருவர், ஒரு ஸ்பான்சரின் உதவியுடன், ஈவென்ட் மேனேஜ்மென்ட், talent handling, ஸ்போர்ட்ஸ் மார்க்கெடிங், ஸ்போர்ட்ஸ் மீடியா மற்றும் விளம்பரம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும், Cricinfo, ESPN போன்ற ஆன்லைன் வாய்ப்புகளும் உள்ளன. ஜிம்கள், கோச்சிங் வகுப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் என்ற வகையிலும் வருமானம் ஈட்டலாம். விளையாட்டு நிபுணர்களை பணிக்கு அமர்த்தி, Edusports, பள்ளிகளில் விளையாட்டுக் கல்வியை வழங்குகிறது.

குறைந்தது 5 வருடங்களில், அனுபவம் பெற்ற ஒருவர், டெலிவரி மேலாளர், ரிலேஷன்ஷிப் மேலாளர் போன்ற நிலைகளுக்கு உயரலாம். மேலும், விற்பனை, பாடத்திட்டங்கள், செயல்முறைகள் மற்றும் மதிப்பீட்டு நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபடலாம்.

இத்தகைய திறன்களைப் பெற்ற ஒருவர், சீனியர் நிலை மேலாண்மைப் பணிகளுக்கு செல்லலாம். அனுபவத்தைப் பொறுத்து, ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பளமாக பெறலாம்.

இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள்

பல அரசு பல்கலைக்கழகங்கள், இத்துறையில், பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன.

தகுதி

பள்ளிப் படிப்பை முறையாக நிறைவு செய்திருக்க வேண்டும். என்.சி.சி., அனுபவத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

தேர்வுசெய்யும் முறை

அகடமிக் டெஸ்ட், உடல்தகுதி தேர்வு மற்றும் விளையாட்டு திறன் சோதனை ஆகியவை நடத்தப்பட்டு, அதனடிப்படையில் தேர்வு நடைபெறும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்