ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதி | Kalvimalar - News

ஸ்டான்லி மருத்துவ கல்லூரி: 100 கூடுதல் இடங்களில் சேர்க்கைக்கு அனுமதிஜூலை 14,2013,10:21 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) ஒப்புதல் வழங்கி உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரியின், அதிகரிக்கப்பட்ட, 85 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடத்த, நேற்று முன்தினம், எம்.சி.ஐ., அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், 100 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, நேற்று, எம்.சி.ஐ., இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்விரு கல்லூரிகளின் முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 185 கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்களும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.


வாசகர் கருத்து

நடப்பு ஆண்டு கூடுதல் 50 சீட் mbbs -எல்லா காலேஜ்க்கும் மெடிக்கல் கவுன்செல் கொடுப்பது admission நடைமுறைக்கு வர தமிழ்நாடு அரசு முதல்வர் அவர்கள் முலம் அணைத்து நடவடிக்கையும் எடுத்து மாணவர்களுக்கு admission 2013-14 இல் விரைவில் வழங்கவேண்டும் .
by v.chandrabose,India    14-ஜூலை-2013 21:25:09 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us