மருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்பு | Kalvimalar - News

மருத்துவம் சார் முதுநிலை படிப்புகள்: விண்ணப்பிக்க காலகெடு நீட்டிப்புஜூலை 14,2013,10:16 IST

எழுத்தின் அளவு :

சென்னை: மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான காலகெடு, வரும், 20ம் தேதி வரை, நீடிக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி., - மருத்துவ இயற்பியல், எம்.பில்., - மருத்துவ சமூக பணி, எம்.எஸ்சி., - மூலக்கூறு ஆய்வியல் ஆகிய, மருத்துவம் சார் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இம்மாதம், 13ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இதற்கான காலக்கெடு, வரும், 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில், 19ம் தேதி, மாலை, 5:00 மணி வரை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சுகாதாரத் துறை இணையதளத்தில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us