பி.இ., 2ம் ஆண்டு நேரடி கலந்தாய்வுக்கு வந்த 9 மாத கர்ப்பிணி | Kalvimalar - News

பி.இ., 2ம் ஆண்டு நேரடி கலந்தாய்வுக்கு வந்த 9 மாத கர்ப்பிணிஜூன் 30,2013,08:19 IST

எழுத்தின் அளவு :

காரைக்குடி: காரைக்குடியில் நடக்கும்,பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி கவுன்சிலிங்கில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவர் கல்லூரியை தேர்வு செய்தார்.

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,கல்லூரியில் நடந்து வருகிறது. நேற்று காலை துவங்கிய சிவில் பிரிவு கவுன்சிலிங்கில், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தை சேர்ந்த சுகன்யா,25, என்ற ஒன்பது மாத கர்ப்பிணி, தன் கணவரின் தங்கை புவனாதேவியுடன் பங்கேற்றார்.

அவர் கூறுகையில், "நான் கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில், டிப்ளமோ முடித்தேன். உடனே, திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த ஆக., 22 ல், திருமணம் நடந்தது. என் கணவர் பெரியசாமி, ஐ.டி.ஐ., முடித்திருந்தார். அவர் கடந்த மாதம், வேலைக்காக வெளிநாடு சென்றார்.

என் படிப்பு வீணாகக்கூடாது, என்ற எண்ணத்தில், என்னை தொடர்ந்து படிக்க வைக்க எண்ணினார். தற்போது கவுன்சிலிங்கில் பங்கேற்க வந்தேன். ஏற்கனவே டிப்ளமோ படித்த, கைக்குறிச்சி பாரதி இன்ஜி., கல்லூரியிலேயே எனக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us