கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி: ஜூலையில் துவக்கம் | Kalvimalar - News

கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி: ஜூலையில் துவக்கம்ஜூன் 30,2013,08:18 IST

எழுத்தின் அளவு :

சென்னை: இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கு, முதலுதவி பயிற்சி வழங்க உள்ளன. இதற்கான வகுப்பு, ஜூலையில் துவங்குகிறது.

தமிழகத்தில் பாலிடெக்னிக், கலை - அறிவியல், கல்வியியல், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட, 2,285 கல்லூரிகளில், "இளைஞர் செஞ்சிலுவை சங்கம்" செயல்படுகிறது. இதில், 12.50 லட்சம் மாணவர்கள் உறுப்பினராக உள்ளனர்.

ஒவ்வொரு கல்லூரியிலும், இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர், மாணவர்களை ஒருங்கிணைத்து, ரத்த தான முகாம், முதலுதவி பயிற்சி, பேரிடர் மேலாண்மை பயிற்சி உள்ளிட்ட வகுப்புகளை நடத்துகின்றனர்.

கடந்த காலங்களில் நடந்த இயற்கை சீற்றம், விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்பை கருத்தில் கொண்டு, இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு இணைந்து, கல்லூரி மாணவருக்கு முதலுதவி பயிற்சி வழங்க உள்ளன.

இதுகுறித்து, இந்திய செஞ்சிலுவை சங்க, தமிழக பிரிவு நிர்வாக செயலர், நாராயணன் கூறியதாவது: கல்லூரிகளில், முதலுதவி பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம், 70 ரூபாய். ஜூலை மாதம் பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு, எழுத்து தேர்வு, வாய்மொழி தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம், மூன்றாண்டு வரை, மாணவர், பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி வழங்க முடியும். இவ்வாறு, நாராயணன் கூறினார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us