அமெரிக்காவில் படிக்க ஏ.சி.டி.,! | Kalvimalar - News

அமெரிக்காவில் படிக்க ஏ.சி.டி.,!பிப்ரவரி 01,2016,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் தங்களது உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு ஏ.சி.டி., எனப்படும் ’அமெரிக்கன் காலேஜ் டெஸ்ட்’!

ஏ.சி.டி., தேர்வின் மூலம் சர்வதேச மாணவர்களின் பகுப்பாய்வு திறன்கள் மதீப்பீடுசெய்யப்படுகின்றன. எனவே, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், ஹார்வர்டு பல்கலைக்கழகம், சிகாகோ பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு அமெரிக்கா மற்றும் கனடா கல்வி நிறுவனங்கள், இத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இளநிலை பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தேர்வு விபரம்

எழுத்துத்தேர்வு: ‘மல்டிபில்- சாய்ஸ்’ அடிப்படையில், ஆங்கிலம், கணிதம், வாசித்தல் மற்றும் அறிவியல் போன்ற நான்கு பகுதிகள் எ.சி.டி., தேர்வில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலம் சொல் திறன் மற்றும் ஆங்கில எழுத்தறிவு திறன்கள் ஆகியவையும் மதீப்பீடு செய்யப்படுகின்றன.

கணிதம்: பிளஸ் 2 அளவிலான கணிதப் பாடங்களில், மாணவர்களின் கணிதத் திறமைகள் சோதிக்கப்படுகிறது.

அறிவியல்: இன்டர்பிரிடேஷன், அனலைசஸ், எவாலுவேஷன், ரீசனிங் மற்றும் பிராப்ளம் சால்விங் உள்ளிட்டவை சோதிக்கப்படுகிறது.

விருப்பத்தேர்வு: உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி (என்டரி லெவல்) அளவிலான ஆங்கில மொழி எழுதும் திறன்களை மதீப்பீடு செய்ய ‘ஏ.சி.டி.,பிளஸ்’ எனப்படும் விருப்ப எழுத்து தேர்வு(ஆப்ஷனல் ரைட்டிங் டெஸ்ட்)-ம் நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்களையும் சில கல்வி நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, மாணவர் சேர்க்கையை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

தேர்வின் கால அளவு: 3 மணி 35 நிமிடங்கள்.

தகுதிகள்: உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த அனைத்து வயதினரும் இத்தேர்வை எழுதலாம்.

மேலும் விவரங்களுக்கு: www.actstudent.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us