மே 27ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் | Kalvimalar - News

மே 27ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள்மே 10,2013,11:57 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவர்கள், மே 27ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலரும் எதிர்பார்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டு விட்டன. இதையடுத்து, அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று, மே 27ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களாக எழுதியவர்கள், தாங்கள் தேர்வெழுதிய மையங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும். மேலும், தட்கல் திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே, மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல்கள்

இந்த 2013 மார்ச் மேல்நிலைத்தேர்வை எழுதியோர், தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மறுகூட்டல் கோரியோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர், மே 10ம் தேதி முதல், 13ம் தேதி, மாலை 5 மணிவரை www.dge.tn.nic.in. என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் நகல் கோரியோ அல்லது மதிப்பெண் மறுகூட்டல் கோரியோ விண்ணப்பம் செய்வோர், ஒவ்வொரு பாடத்திற்குமூ தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பம்செய்வோர், அதே பாடத்திற்கு, மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. விடைத்தாளின் நகல் பெற்றபிறகு, அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்

பகுதி 1 மொழி - ரூ.550
பகுதி 2 மொழி(ஆங்கிலம்) - ரூ.550
ஏனைய பாடங்கள்(ஒவ்வொன்றுக்கும்) - ரூ.275.

மறுகூட்டல் கட்டணம்

பகுதி 1 மொழி, பகுதி 2 மொழி(ஆங்கிலம்) மற்றும் உயிரியல்(ஒவ்வொன்றுக்கும்) - ரூ.305

ஏனைய பாடங்கள்(ஒவ்வொன்றுக்கும்) - ரூ.205

பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏதேனுமொரு கிளையில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு இறுதித்தேதி மே 14.

விடைத்தாள் மறுமதிப்பீடும்(Revaluation), கட்டணமும்

விடைத்தாளின் நகல்கோரி விண்ணப்பித்து, அதனை பெற்றபிறகே, விரும்பினால், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

பகுதி 1 மொழி - ரூ.1010
பகுதி 2 மொழி(ஆங்கிலம்) - ரூ.1010
ஏனைய பாடங்கள்(ஒவ்வொன்றுக்கும்) - ரூ.505.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us