பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர் | Kalvimalar - News

பொறியியல் விண்ணப்ப தேதியை நீட்டிக்க முடியாது: உயர்கல்வி அமைச்சர்மே 10,2013,10:28 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகாததால், அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க முடியாது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் நேற்று நடந்த மானியக் கோரிக்கையின் போது, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., வெங்கடேசன், "அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க, இம்மாதம், 20ம் தேதியே, கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்திருந்தாலும், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. எனவே, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை நீட்டிக்க முடியுமா?" என்றார்.

அதற்கு பதில் அளித்த, உயர்கல்வித்துறை அமைச்சர், பழனியப்பன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் படி, மே மாதம், 20 க்குள் விண்ணப்பித்து, ஜூன் 5க்குள் ரேண்டம் எண் தயாரிக்க வேண்டும். ஜூலை 30க்குள் மாணவர் சேர்க்கை முடித்து, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள், வகுப்புகளை துவக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

அதற்காகவே, 15 நாட்களுக்கு முன்னர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்றாலும், மாணவர்கள், தங்களின் தேர்வு எண், ஜாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வைத்து விண்ணப்பிக்கலாம்.

ஜூன் 5 க்குள், சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியாகலாம். அதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை, நீட்டிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

anna university tharam miha mosamaha povatharku ullukul nadakum oolal than karanam... utharanathirku solla vumanal... M.E. RESULT kadantha march 24 l publish anathu... athil exam yeluthiya neraya manavarkaluku ABSEBT yenru result vanthathu..(ithu kurithu 26, march dinamalar paperil news vanthathu. mihavum payanaha irunthathu. NANRI) APRIL 5 revaluation date sonnargal. ABSENT potta paperuku revaluation poda mudiyatha karanathal, athan pin antha exam ku uriya exam fees seluthinom... APRIL LAST WEEK matrum MAY 2 il department variyaha marpadiyum result publish seithargal( thanks 26, may news).. aanaal neraya manavargal nalla vithamaha thervu yeluthiyum arrear yenra yematram minchiyathu. melum neraya manavarkal distinction vaipugalai ilakum soolnilaiyi, may 2 il vantha result ku revaluation apply seyya vaipu ketirunthom... anal april 2nd week laye revalution date mudinthu vittathaga sollivitargal... ithu final semester padikum manavargaluku miga mosamana yematram. MAY 2 il VANTHA RESULT KU APRIL MONTH REVALUATION DATE MUDINTHU VITTATHU YENRU KURIYA ANNA UNIVERSITY YAI THANGALAI PONRA PATHIRIKKAI MATTUME, THATTI KETTU YENKALUKU NIYAYAM KIDAIKA SIEYA VUM. M.E. EXAM JUNE 16 KU MEL THAN YENPATHAL KIDAIKUM NATKALAI REVALUATIONKU DATE VANKI THARA KENJUM FINAL SEM MANAVARKAL..... NANRIYUDAN VASAKAN... 9500405083
by karthikeyan,India    10-மே-2013 22:38:33 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us