பணி நியமன அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார்: நர்சரி ஆசிரியர்கள் நம்பிக்கை | Kalvimalar - News

பணி நியமன அறிவிப்பு முதல்வர் வெளியிடுவார்: நர்சரி ஆசிரியர்கள் நம்பிக்கைஏப்ரல் 22,2013,15:28 IST

எழுத்தின் அளவு :

புதுக்கோட்டை: "தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பணிநியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார்," என நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகம் முழுவதும் திறந்த நிலை பல்கலையின் மூலம் நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த பல ஆண்டாக பணி வாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். இவர்களில் சிலர் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும், 3,500 பள்ளிகளில் ஆங்கில இணைப் பிரிவு துவங்க உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது.

இதனடிப்படையில் தமிழக சட்டசபையில் மே 10ம் தேதி நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது நர்சரி பள்ளி ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள ஆசிரியர்களை பணிநியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவார் என புதுக்கோட்டை மாவட்ட தொடக்கப்பள்ளி இளநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


வாசகர் கருத்து

இவ்வாறு ஆசிரியர் பணிஇடங்கள் மட்டும் இன்றி ஆசிரியரல்லாத பணி இடங்களை நிரப்பினால் நிச்சயமாக அரசு பள்ளிகளின் தரம் உயரும் .
by தி.ரஞ்சித் ,India    23-ஏப்-2013 13:46:35 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us