கைதிகளுக்கு உயர்கல்வி வழங்க சிறைகளில் இக்னோ பயிற்சி மையம் | Kalvimalar - News

கைதிகளுக்கு உயர்கல்வி வழங்க சிறைகளில் இக்னோ பயிற்சி மையம்ஏப்ரல் 22,2013,08:44 IST

எழுத்தின் அளவு :

சென்னை: சிறை கைதிக்கு, உயர் கல்வி வழங்க, புதுச்சேரி, சென்னை புழல், சேலம் மத்திய சிறைகளில், "இக்னோ" என அழைக்கப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், பயிற்சி மையங்களை அமைக்க உள்ளது.

மையங்களில் கணினி வசதியுடன் நூலகம், மாணவர்கள் நேரடியாக பயிற்சி தகவல்களை பெறுவதற்கு வசதியாக ஆசிரியர் குழு ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளன. கைதிகளுக்கு, பாடப் புத்தகங்களும், பயிற்சியும், இலவசமாக வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறையில் இருந்து, மற்றொரு சிறைக்கு, கைதி யை மாற்றும் போது, புதிதாக அடைக்கப்படும் சிறையில் உள்ள பயிற்சி மையங்களில், படிப்பை தொடர முடியும். படித்து கொண்டிருக்கும் காலத்தில், தண்டனை முடிந்து விடுதலை பெற நேர்ந்தால், வெளி யே வந்த பின், கட்டணம் செலுத்தி, படிப்பை தொடர வாய்ப்பு உண்டு.

விடுதலைக்கு பின், புது வாழ்வை துவங்க, தேர்ந்த நிபுணர்களின் அறிவுரையும், படிப்பு மையங்களில் வழங்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம், வேலூர், திருச்சி, கோ வை உள்ளிட்ட, ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்கள் சிறப்பு சிறைகள், ஒரு சிறார் சீர்திருத்த பள்ளி ஆகியவற்றில், கல்வி பயிற்சி மையங்களை அமைத்துள்ளது.

இவற்றின் மூலம், ஆண்டுக்கு, 300க்கும் மேற்பட்ட கைதிகள், உயர் கல்வி பெறுகின்றனர். வேலூர் சிறையில், ஒரு மையத்தை ஏற்கனவே அமைத்துள்ளது. அதன் வழியாக, 10க்கும் மேற்பட்ட கைதிகள், இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்துள்ளனர்.

இக்னோ மண்டல இயக்குனர், அசோக்குமார் கூறுகையில், "மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில சிறைத்துறை ஐ.ஜி.,க்களுக்கும், ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், அனைத்து சிறைக் கைதிகளுக்கும், உயர்கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "புழல், சேலம், புதுச்சேரி மத்திய சிறைகளில், பயிற்சி மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மற்ற சிறைகளிலும், விரைவில் மையங்கள் அமைக்கப்படும்" என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us