லயோலா கல்லூரியில் புதிய வகுப்பறைகள்: முன்னாள் மாணவர்கள் நிதிஉதவி | Kalvimalar - News

லயோலா கல்லூரியில் புதிய வகுப்பறைகள்: முன்னாள் மாணவர்கள் நிதிஉதவிஏப்ரல் 15,2013,09:43 IST

எழுத்தின் அளவு :

சென்னை: லயோலா கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கல்லூரி நிர்வாகம், முன்னாள் மாணவர் சங்கத்திடம் நிதி கோரியதையடுத்து, மாணவர்கள் கோடிக்கணக்கில் பண உதவியளித்து, கல்லூரி வளர்ச்சிக்கு உதவி உள்ளனர்.

லயோலா கல்லூரி மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்திடம் நன்கொடை கோரியது. முன்னாள் மாணவர் சங்கம், இதற்கு பெருமளவு ஆதரவு அளித்து, நன்கொடையை வாரி வழங்கியது.

இதுகுறித்து, முன்னாள் மாணவர் சங்க இயக்குனரும், லயோலா கல்லூரியின், முன்னாள் முதல்வருமான சேவியர் அல்போன்ஸ் கூறியதாவது:

கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், 3,500 மாணவர்கள் படித்தனர். தற்போது, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்லூரியை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.

கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் மாணவர் ஒருவர், இரண்டு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளார். முன்னாள் மாணவர் சங்கமும், 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது.

கல்லூரிக்கு நிதி திரட்டும் வகையில், "அன்றும், இன்றும், என்றும்... லயோலா கல்லூரி பாதை" என்ற நிகழ்ச்சியை, முன்னாள் மாணவர் சங்கம் நடத்தியது. இதில், கல்லூரி படிப்பை முடித்து, முன்னணியில் உள்ள தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்துறையினர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இவ்வாறு, அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், நடிகர் சரத்குமார், பிரபு, விஜய், சூர்யா, விஷால், விக்ரம், அரவிந்த் சாமி, ஜெயம் ரவி, இயக்குனர்கள் தரணி, ராதா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்களின் நிதி மூலம், கல்லூரி வளாகத்தில், 15 கோடி ரூபாயில், மூன்று மாடி கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us