பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை கிடையாது: டாக்டர் ஆர்.லட்சுமிபதி | Kalvimalar - News

பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை கிடையாது: டாக்டர் ஆர்.லட்சுமிபதிஏப்ரல் 15,2013,09:39 IST

எழுத்தின் அளவு :

மதுரை: "பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் நன்கொடையாக ஒரு காசு கூட வாங்குவதில்லை" என, மதுரை அருப்புக்கோட்டை ரோடு, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேசினார்.

இக்கல்லூரியில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவரும், "ஸ்காட்" மதுரை கிளைத் தலைவருமான டாக்டர் ஆர். லட்சுமிபதி பேசியதாவது:

எனது தந்தை மற்றும் சகோதரர்கள், "ஸ்காட்" கல்லூரியில்தான் படித்தனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நான் கற்றுக் கொண்ட விஷயங்கள்தான், என்னை பன்முகத்திறன் பெற்றவனாக மாற்றியது. அந்த லட்சியத்தோடுதான், எங்களது பள்ளி மற்றும் கல்லூரிகளில் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை.

"கேபிடேஷன்" கட்டணமும் வசூலிப்பதில்லை. விரைவில் புற்றுநோய் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்க வேண்டும் என்பதே என் ஆசை, என்றார்.மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஆல்பர்ட் கிறிஸ்டோபர் தாஸ் வரவேற்றார். கிளை பொருளாளர் மோகன்தாஸ் ஆண்டறிக்கை வாசித்தார்.

"ஸ்காட்" கல்லூரி முதல்வர் ஜேஸர் ஜெபனேசர், மதுரை கிளை செயலாளர் ஜேம்ஸ் பங்கேற்றனர். சமீபத்தில் இறந்த, கிளை முன்னாள் செயலர் மகாத்மன்ராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. புதிய செயலராக ஆகானந்த பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us