பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள் | Kalvimalar - News

பார்மசி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை முறைகள்

எழுத்தின் அளவு :

மருத்துவ படிப்பில் சேர முடியாதவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் பார்மசி படிப்பில் இடம்பெறுவதற்கான முறைகளை அறிந்துகொண்டால், மாணவர்களுக்கு சுலபம்.

தகுதி

இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொள்ள, பள்ளி மேல்நிலைப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வேதியியல் மற்றுமூ கணிதம் படித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகள் மாணவர்களிடம் ஒவ்வொரு விதமான தகுதிகளை எதிர்பார்க்கின்றன. முழு விபரங்களுக்கு, அந்தந்த கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்க்கவும்.

நுழைவுத்தேர்வு

இளநிலை அளவிலான பார்மசி படிப்புகளில் சேர, Common entrance test(CET), ENAT(Manipal university), Amrita institute of medical science(AIMS), BHU entrance test, Poona college of pharmacy Bpharm entrance exam, SRM All India entrance exam(Sri Ramachandra medical college) and EAMCET(Andhra university) போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பார்மசி முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேர, பார்மசி பட்டதாரிகள், GPAT(Graduate pharmacy aptitude test) மற்றும் GATE(Graduate aptitude test in engineering) தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும்.

தயாராகுதல்

செட்(CET) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், முழுவதும் மெரிட் முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். 12ம் வகுப்பின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே கேள்விகள் இருக்கும்.

மொழித்திறன், மதிப்பிடும் திறன், தரவு பகுப்பாய்வு மற்றும் நிறைவு, நுண்ணறிவு மற்றும் தர்க்க ஆராய்ச்சி மற்றும் பாட அறிவு போன்ற பிரிவுகளின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். நுழைவுத் தேர்வில் நீங்கள் வெற்றிபெறுவதற்கான முதல் தகுதி உங்களின் மனஉறுதி.

இதைத்தவிர, ஒவ்வொரு பாடத்திலும் உங்களுக்குள்ள அறிவை தெளிவாக வைத்துக்கொள்ளவும் மற்றும் அவற்றிலிருந்து கேட்கப்படும் கேள்விகளை எளிமையாக கையாளும் விதமாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

படிப்பின் காலம்

பார்மசி டிப்ளமோ(D.Pharm) படிப்பு, 2 வருட காலங்களைக் கொண்டது. இளநிலை பார்மசி(B.Pharm) படிப்பு, 4 வருடங்களைக் கொண்டது. முதுநிலை பார்மசி(M.Pharm) படிப்பு 2 வருடங்களைக் கொண்டது. ஆய்வுநிலை பார்மசி(Pharm.D) படிப்பு 6 வருடங்களைக் கொண்டது(இதில் 1 வருடம், ரெசிடென்சி அல்லது இன்டர்ன்ஷிப் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியது).

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us