அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு | Kalvimalar - News

அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்புஏப்ரல் 04,2013,07:30 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:

* சேவை இல்லங்களில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி பயனடைகின்றனர். அதிக பெண்கள் பயன் பெற, 1.38 கோடி ரூபாயில், பெரம்பலூர், கிருஷ்ணகிரியில் புதிதாக சேவை இல்லங்கள் துவக்கப்படும்.

* அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, 2.72 கோடி ரூபாய் செலவில், "தன் சுத்தம் பேணும் சுகாதாரப் பை"கள் வழங்கப்படும்.

* 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில், முன்பருவ கல்விக்கு, உட்புறச் சுவர்களில், விளக்கப் படத்துடன் நீதிக் கதைகள் அச்சிட்டு தரம் உயர்த்தப்படும்.

* சென்னை, தாம்பரம் சேவை இல்லத்தில், ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவியருக்கு, 1 கோடி ரூபாய் செலவில், தங்கும் விடுதி கட்டப்படும்.

* குழந்தைத் திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசார விளம்பரப் படங்கள் தயாரிக்கப்படும்.

* அங்கன்வாடி குழந்தைகளின் எடையை கண்காணிக்க, 50 லட்சம் ரூபாய் செலவில், 2,000 எடை கருவிகள் வழங்கப்படும்.

* ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமாக உள்ள அரியலூரில், முன்னோடி திட்டமாக, ஐந்து மாதங்களுக்கு, 1.29 கோடி ரூபாய் செலவில், சிறு தானியங்களின் கலோரி மதிப்பு குறையாமல், குழந்தைகள் விரும்பும் வண்ணம், தினசரி, 50 கிராம் லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்.

* அரசினர் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில், சூரிய சக்தி உபகரண தெரு விளக்குகள், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

* பெரம்பலூரில், 370 சத்துணவு மையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 3.71 லட்சம் ரூபாய் செலவில், கூடுதலாக, தினசரி, 500 கலோரி ஊட்டச்சத்து கொண்ட உணவு பொருட்கள், 220 வேலை நாட்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us