தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை துவக்கம் | Kalvimalar - News

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: சென்னையில் நாளை துவக்கம்ஏப்ரல் 04,2013,07:23 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தினமலர் நாளிதழ் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான, வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் நாளை துவங்குகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த தகவல்களை அளிக்கும், வழிகாட்டி நிகழ்ச்சி, தினமலர் நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற, தினமலர், வழிகாட்டி நிகழ்ச்சியில், மாணவர்கள் அடுத்து என்ன படிப்பைத் தேர்வு செய்வது, எந்தக் கல்லூரியில் சேர்வது, எந்தந்த கல்லூரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன என, ஏராளமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படுகிறது.

இந்தாண்டிற்கான, வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நாளை துவங்கி, வரும், 7ம் தேதி வரை நடக்கிறது. டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக தலைவர் ஏ.சி.சண்முகம், கருத்தரங்கம் மற்றும் கல்வி நிறுவனங்களின் கண்காட்சியை, நாளை துவக்கி வைக்க உள்ளார்.

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 95 முன்னணி கல்வி நிறுவனங்கள், அரங்கங்களை அமைந்துள்ளன. தங்களிடம் உள்ள படிப்புகள், கல்லூரியின் தனித்தன்மை, கல்லூரி கட்டணங்கள் குறித்து, கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர். மாணவர்களும், பெற்றோரும் நேரடியாக, ஸ்டால்களை பார்வையிட்டு, தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.

கல்வி நிபுணர்கள் பங்கேற்று, நேரடியாக விளக்கம் தரும் கருத்தரங்கத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும், மூன்று நாட்களிலும் கருத்தரங்கம், காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரையும், மாலை, 4:00 மணி முதல், 5:30 மணி வரையும் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடக்கும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம். கேன்டீன் வசதி செய்யப்பட்டுள்ளது.

கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும், எந்த கல்லூரியில் என்ன படிப்பு உள்ளது என்ற முழு விவரங்கள் அடங்கிய புத்தகம், இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவ செல்வங்களே... உங்களின் எதிர்கால கனவு தேடலுக்காக நடத்தப்படும், வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க தவறாதீர்கள்!


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us