கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் கலக்கமா? | Kalvimalar - News

கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் கலக்கமா?ஏப்ரல் 03,2013,17:18 IST

எழுத்தின் அளவு :

பிளஸ் 2 தேர்வு முடிந்து விட்டது. அடுத்து எந்த கல்லூரியில் சேர்வது? என்று குழப்பமாக உள்ளதா, சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க கீழ்க்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள்

சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது எம்.பில்., எம்.டெக்., பிஎச்.டி., போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகாரம்

தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.

உள்கட்டமைப்பு வசதிகள்

தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

கல்லூரியின் பிரபலம்

புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும்.

வேலைவாய்ப்பு

தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.

பாடத்திட்டங்கள்

ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.

இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.


வாசகர் கருத்து

சார் I வில் கெட் 190 கட் ஆப் இன் 12த் ...
by வினோத்,India    04-ஏப்-2013 14:53:59 IST
Sir,naan +2 student enaku entha college padika vum entru theria villai . Nalla placement tharum college silla enudaya e-mailluku anupunga plz. thanking you
by s.manimaran,India    04-ஏப்-2013 10:34:05 IST
கல்லூரிகளை தெரிவு செய்யுமுன் அந்த துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பாடம் நடத்துவதற்கு தகுதியான,முறையான ஆசிரியர்கள் உள்ளனரா என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.பிற்காலத்தில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்கும் விதமான பாட பிரிவுகளை தேர்ந்தெடுங்கள்.தமிழ் மொழியறிவோடு ஆங்கில புலமையினையும் வளர்த்து கொள்ளுங்கள்.நிறைந்த அன்புடன்....................................டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்
by டாக்டர்,எ.ஜோசப்.லண்டன் ,India    04-ஏப்-2013 03:18:49 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us