10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர் | Kalvimalar - News

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 10.68 லட்சம் பேர் எழுதுகின்றனர்மார்ச் 26,2013,10:46 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது; 10.68 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர். கடந்த, 1ம் தேதியில் இருந்து, நடந்து வரும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், நாளையுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடக்கின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். இவர்களில், 5 லட்சத்து, 43 ஆயிரத்து, 152 பேர் மாணவர்கள்; 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மாணவியர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன.

சென்னையில், 222 மையங்களில் நடக்கும் தேர்வில், 58 ஆயிரத்து, 436 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களில், 29 ஆயிரத்து, 101 பேர், மாணவர்; 29 ஆயிரத்து, 335 பேர், மாணவியர்.

தேர்வு நடக்கும் தேதிகள் விவரம்:

27.3.13 - தமிழ் முதற்தாள்
28.3.13 - தமிழ் இரண்டாம் தாள்
1.4.13 - ஆங்கிலம் முதற்தாள்
2.4.13 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
5.4.13 - கணிதம்
8.4.13 - அறிவியல்
12.4.13 - சமூக அறிவியல்


வாசகர் கருத்து

ALL THE BEST..........
by HARI,India    27-மார்-2013 08:26:00 IST
All is well... Write the exam with full confident...
by Poornan,India    26-மார்-2013 23:11:12 IST
ஆல் தி பெஸ்ட்...
by shobana,India    26-மார்-2013 15:44:21 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us