குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை | Kalvimalar - News

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கைமார்ச் 21,2013,08:01 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: குரூப் -1 தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினருக்கு 35 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா, குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.

எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி, குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us