ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமையுமா? | Kalvimalar - News

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி அமையுமா?மார்ச் 19,2013,14:54 IST

எழுத்தின் அளவு :

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி துவங்குவதற்கான அறிவிப்பு தமிழக பட்ஜெட்டில் வெளியிடப்படும், என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகி, சிகிச்சைக்காக ராமநாதபுரம் கொண்டு வந்து, பின் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் இறந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இதற்கு ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி அமைந்தால், உரிய சிகிச்சை இங்கேயே கிடைக்கும். உயிர்சேதம் தவிர்க்கப்படும்.

இதற்காக ஏற்கனவே மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில் முந்தைய ஆட்சியில் மருத்துவ கல்லூரி கொண்டு வரும் திட்டத்தில் ராமநாதபுரம் சேர்க்கப்படும் என கூறினர். பின் சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால், ராமநாதபுரம் மக்கள் ஏமாற்றமடைந்தனர். ஒவ்வொரு முறையும் மருத்துவ கல்லூரி வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளபோது, மத்திய, மாநில அமைச்சர்கள் சிபாரிசில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரவேண்டியவை வேறு மாவட்டத்திற்கு கைமாறி சென்றுவிடுகிறது. தற்போது மருத்துவ கல்லூரி தரத்திற்கு இணையாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ கல்லூரியும் அமைந்தால், மாவட்ட மக்கள் மிகுந்த பயனடைவர். வரும் தமிழக பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வர அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site