அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும் பெரம்பலூர் எம்.எல்.ஏ., உறுதி | Kalvimalar - News

அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும் பெரம்பலூர் எம்.எல்.ஏ., உறுதிமார்ச் 19,2013,13:33 IST

எழுத்தின் அளவு :

பெரம்பலூர்: "பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும்,&'&' என பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவில் பெரம்பலூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ஆறு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் (டயாலிஸிஸ்) ரத்தம் சுத்திகரிப்பு சிகிச்சை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 11 மணியளவில் நடந்தது. விழாவுக்கு பெரம்பலூர் ஆட்சியர் தரேஷ் அஹமது தலைமை வகித்து, டயாலிஸிஸ் இயந்திரத்தை துவக்கி வைத்தார்.

விழாவில், பெரம்பலூர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து பேசியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கும் அனைத்துவித நவீன மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் விரிவான காப்பீட்டு திட்டத்தை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இந்துசமய அறநிலைய துறைக்கு சொந்தமான 99 ஏக்கரில் 35 ஏக்கரில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகில் பெரம்பலூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என வரும் 21ம் தேதி நடக்கும் பட்ஜெட் கூட்டத்தில் பேச அனுமதி கேட்டுள்ளேன். முதல்வரின் அனுமதி கிடைத்தால் இதுகுறித்து சட்டசபையில் பேசி பெரம்பலூருக்கு அரசு மருத்துவக்கல்லூரி பெற்றுத்தரப்படும். பெரம்பலூரில் அரசு மருத்துவக்கல்லூரி விரைவில் அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

very good
by dhanaraj ,India    19-மார்-2013 14:38:29 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us