புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 19 பேருக்கு பணி நியமன ஆணையும், 58 பேருக்கு பயிற்சிக்கான சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் மனோகரன் வழங்கினார்.
புதுக்கோட்டையில், புதுவாழ்வு திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. எல் அன்ட் டி, லாஜிஸ்டிக்ஸ், கேபிட்டல் சி.என்.சி., உணவாக்கம் மற்றும் உணவியல் தொழில்நுட்ப நிறுவனம், இன்டிமேட் பேஷன் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நிறுவனம், டி.வி.எஸ்., மற்றும் சங்கர் இன்ஸ்டியூட் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, சி.எஸ்.சி., கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் உட்பட, ஒன்பது தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியுடைய இளைஞர்களை தேர்வு செய்தன.
இதையடுத்து, 19 பேருக்கு பணி நியமன ஆணையும், 58 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சான்றிதழும், அந்தந்த நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்டது. அவற்றை, மாவட்ட ஆட்சியர் மனோகரன் வழங்கினார்.