10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம் | Kalvimalar - News

10ம் வகுப்பு கணித வினாத்தாளில் மாற்றம்: 100/100 அள்ளலாம்மார்ச் 05,2013,08:02 IST

எழுத்தின் அளவு :

மதுரை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேர்வு துறை அனுப்பிய சுற்றறிக்கை: கணித வினாத்தாளில் ஒரு மார்க் பகுதியில், 15 வினாக்கள் கேட்கப்படும். இதில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வினாக்களில் இருந்து 10ம், யோசித்து பதில் எழுதுமாறு 5 கேள்விகளும் இருந்தது. இது மாற்றப்பட்டு, 15 வினாக்களும் புத்தகத்தில் உள்ள கேள்விகளே கேட்கப்படும்.

கட்டாயம் விடையளிக்கும், 2 மார்க் பகுதியில் 30வது கேள்வியும், 5 மார்க் பகுதியில் 45வது கேள்வியும் மாணவர்கள் கடினமான பகுதியாக நினைக்கும் இயற்கணிதம், எண் தொடர், அளவீடுகள் ( 2, 3, 5 மற்றும் 8வது பாடங்கள்) பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 பாடங்களிலும் இருந்தும், யோசித்து எழுதாத வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டு மார்க் மற்றும் 5 மார்க் பகுதியில் தலா 2 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருக்கும். இந்தாண்டு முதல் இந்த முறை தவிர்த்து, புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகள் இடம் பெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்றாண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, யோசித்து விடையளிக்கும் எழுதும் வகையில் அதிக வினாக்கள் இடம்பெற்றதே காரணம்.

இதனால், அவ்வகையான வினாக்களை சில பகுதியில் மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு" மதிப்பெண்களை மாணவர்கள் அள்ளுவார்கள், என எதிர்பார்க்கலாம்.


வாசகர் கருத்து

அறிவு திறனை வளர்ப்பதாக இருக்குமா?
by gpsamy,India    07-மார்-2013 17:46:58 IST
manavargalin arivuth thiranai vallarka arasu muyalumo?
by rajalakshmi,India    06-மார்-2013 22:53:06 IST
ஓ குட் குட்......
by KESAVAN,India    06-மார்-2013 10:18:12 IST
மிக மோசமான நடடிக்கை. மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல் மறைந்து போகும் மாணவர்கள் சிந்திக்க கொஞ்சம் வாய்ப்பு கொடுங்க சிறந்த மாணவர்கள் வெளிவரட்டும். மதிப்பெண் மட்டும் சோறு போடாது . இப்படியே போன கல்வி துறை உறுப்படுமா.
by jebabernard,India    06-மார்-2013 07:57:56 IST
This is useful to Village Students Backward means not have basic level. This is useful to Just Pass and give 100% result to maximum schools..so i accept this tem for village poor guys....
by இளங்கோவன் G,India    05-மார்-2013 23:04:13 IST
குட் concept
by durai,India    05-மார்-2013 22:32:57 IST
STUDENTS BEST
by abimanyu,India    05-மார்-2013 21:05:36 IST
அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சோபிக்காததற்குக் காரணம் இவ்விதமான கல்வி முறையே கல்வித்துறை யோசிக்க வேண்டும். இது மிகத் தவறான அணுகுமுறை. சி.பி.எஸ்.ஈ. மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டியிடவே முடியாது. அங்கு 70/30 (தோராயமாக) என்ற அளவில் யோசித்து எழுதும் கேள்விகள்/நூலில் உள்ள கேள்விகள் உள்ளன.
by parithimathi,India    05-மார்-2013 18:54:02 IST
இது மாணவரின் சிந்திக்கும் திறனை குறைக்கும்.
by Thiru,India    05-மார்-2013 18:53:46 IST
கடினம் தான்
by aravind,India    05-மார்-2013 16:48:03 IST
இது கண்டிப்பாக மாணவர்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது..
by poongodl,India    05-மார்-2013 15:25:31 IST
pl. remove our childeren from exam fear and improve the our childerens confindent level in examination
by DAMODARARAJAN G,India    05-மார்-2013 15:05:43 IST
படித்து மார்க் வாங்குவதில் எந்த பயனும் இல்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. செய் முறை தேர்வு தான் சிறந்தது.
by justin,India    05-மார்-2013 14:21:22 IST
நூற்றுக்கு நூறு மதிப்பெண் யோசித்து விடையளித்து பெற முடியாதா? இதனால் மதிப்பெண் உயரும் ஆனால் கல்வியின் தரம் கண்டிப்பாக குறையும்.
by iyalisai,India    05-மார்-2013 11:32:16 IST
எப்படியோ மாணவர்களை வெறும் மனனம் செய்யும் கருவிகளாகவே மாற்றும் கல்விமுறை. இதில் மதிப்பெண்கள் மட்டுமே குறிக்கோள். நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான ஆற்றல் கல்வியிலிருந்து பெறவும் முடியாது. கல்வி வெறும் கேள்விக்குறி தான் நம்ம ஊரில்.
by sami,India    05-மார்-2013 08:46:19 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us