எப்படி உதவலாம் பெற்றோர்? | Kalvimalar - News

எப்படி உதவலாம் பெற்றோர்?மே 22,2013,11:53 IST

எழுத்தின் அளவு :

பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, எதிர்காலத்தை பற்றிய பயம் மற்றும் பாதுகாப்பின்மையை குழந்தைகள் உணரும் வண்ணம் நடக்க வேண்டியது அவசியம்.

மராத்தான் ஓட்டத்தின் கடைசிக் கட்டம்தான் பொதுத்தேர்வு. இதில் பெற்றோர் உணர வேண்டியது, பிள்ளைகள் தங்கள் சக்தியின் எல்லைக்கோட்டை வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். இக்காலகட்டத்தில், அவர்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெற்றோர் பல வழிகளில் கவனிக்கலாம்.

உணவுமுறை பழக்கங்கள்

ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு உணவுச் சுழற்சி (eating rhthym)இருக்கும். அதை மாற்ற முயற்சிக்காதீர்கள். நேர இடைவெளிவிட்டு சாப்பிடுகிறார்களா என கவனித்துக் கொடுத்தால் போதும். அவர்களது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்திக்கு புரதம் அவசியம். அப்படிப்பட்ட உணவு வகைகளை, அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, விதவிதமான பழங்களை இடைவெளிவிட்டு படித்துக் கொண்டே சாப்பிடும் விதமாக வெட்டிக் கொடுக்கலாம். இரவில் கண்விழித்துக் படிக்கும் குழந்தைகளுக்கு காபி, தேநீர் கொடுக்காமல், புதினா, இஞ்சி, சுக்கு போன்றவற்றை சுடுநீரில் கலந்து கொடுக்கலாம்.

ஆக்கப்பூர்வ அணுகுமுறை

பொதுத்தேர்வை நினைத்து அதிக மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாகலாம். இதை கவனத்தில் கொண்டு அனுசரணையாக நடக்க வேண்டும். அவ்வப்போது மன அழுத்தத்தை நீக்கும் விதமாக, பிள்ளைகள் சிறிது நேரம் வேறு ஏதாவது செய்ய விரும்பினால் விட்டுக் கொடுங்கள். உங்களால் இயலுமானால் கேரம் போன்ற விளையாட்டுக்களை, நீங்களும் அவர்களோடு விளையாடலாம்.

அப்போது அவர்களின் குறிக்கோள்களை, மறைமுகமாக ஞாபகப்படுத்துங்கள். இதுநாள் வரையிலான, அவர்களின் வெற்றிகளை கோடிட்டு காட்டுங்கள். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்களின் வெற்றிப்பாதையை உதாரணமாகக் காட்டுங்கள். எக்காரணத்தை கொண்டும், மற்ற குழந்தைகளின் திறமையை பட்டியல் இடாதீர்கள். குற்றம் சொல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தேர்வு முடிந்த பின் தேவையான திட்டமிடல்களைக் கூட, குழந்தைகளோடு மேலோட்டமாக ஆலோசிக்கலாம்.

அமைதியான சூழல்

சில பிள்ளைகளுக்கு படிக்கும் நேரத்தில் அமைதியும், தனிமையும் தேவைப்படும். சிலருக்கோ தேர்வின் போது காய்ச்சல், தேர்வு குறித்த பதட்டம் ஏற்படும். அப்போது பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் அதிகமாகத் தேவைப்படும். பிள்ளைகளின் தேவையறிந்து, அதற்கு ஏற்றபடியான வழிமுறைகளை வகுத்துக் கொடுங்கள். உறவினர் வீட்டிற்கு வருவதை முடிந்தால் தவிருங்கள். அவர்களுக்கு சொல்லி புரிய வையுங்கள்.

ஒருங்கிணைந்த பயணம்

இப்பயணத்தில் நீங்களும் ஒரு நீங்கா அங்கம் என உணர்த்துங்கள். இந்த நெடும் பயணத்தின் முடிவில் மகிழ்ச்சியும், வெற்றியும் காத்திருக்கின்றது என புரிந்து கொள்ளும் மாணவர்கள், புத்துணர்வுடன் பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவர். இனி என்ன, பதட்டமே இல்லாமல் பிள்ளைகளுடன் நீங்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாமே...

- டாக்டர் உமா


வாசகர் கருத்து

nice tips
by anandhbabu,India    22-பிப்-2013 17:32:46 IST
More useful tips to all parents
by S Izzat Fathima,India    22-பிப்-2013 12:35:48 IST
very nice word
by ஜெய சங்கர் ,India    22-பிப்-2013 10:58:12 IST
superb1
by சரவணன்.k,India    21-பிப்-2013 19:06:09 IST
சரியான நேரத்தில் சரியான ஆலோசனை, நன்றி
by முரளி கிருஷ்ணன்,India    21-பிப்-2013 18:42:32 IST
நல்ல கருத்துக்கு நன்றி
by isakumman,India    21-பிப்-2013 13:36:10 IST
உபயோகமான அறிவுரைகள்.....
by Lakshmi,Kenya    21-பிப்-2013 13:19:22 IST
பயனுள்ளவை. நன்றி.
by முஸ்தபா ,India    21-பிப்-2013 12:18:02 IST
நல்ல கருத்தை மிகவும் அழகாக சொன்னீர்கள் .......
by G SUBRAMANIAN,India    21-பிப்-2013 09:22:46 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us