ஆஸ்திரேலிய பல்கலைகள் பங்குபெறும் கல்விக் கண்காட்சி | Kalvimalar - News

ஆஸ்திரேலிய பல்கலைகள் பங்குபெறும் கல்விக் கண்காட்சிபிப்ரவரி 08,2013,14:58 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஆஸ்திரேலியா சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், பிப்ரவரி 10ம் தேதி, சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில், ஒரு கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் 40 ஆஸ்திரேலிய பல்கலைகள் கலந்து கொள்கின்றன.

IDP Education India என்ற அமைப்பு ஏற்பாடு செய்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதன்மூலம், விண்ணப்ப கட்டணத்தில் தள்ளுபடி பெறுவதோடு, தகுதியுள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைகளிடமிருந்து உதவித்தொகை திட்டங்களை பெறும் வாய்ப்புகளும் உண்டு.

எனவே, மாணவர்கள் தங்களின் ஒரிஜினல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் அவற்றுடன் இணைந்த நகல்களையும் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த கல்விக் கண்காட்சியில் கலந்துகொள்வதன் மூலம், மாணவர்கள், ஆஸ்திரேலிய உயர்கல்விப் பற்றி, தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

கீழ்கண்ட ஆஸ்திரேலியப் பல்கலைகள் அந்தக் கண்காட்சிய்ல பங்கு கொள்கின்றன. அவை,

Australian Catholic University | Blue Mountains International Hotel Management School | Bond University | Carnegie Mellon University, Australia | Central Queensland University | Charles Sturt University | Curtin University | Deakin University + MIBT | Edith Cowan University | Flinders University | Griffith University | IIBIT | James Cook University | La Trobe University | Le Cordon Bleu | Macquarie University | Melbourne Institute of Technology | Monash University | Murdoch University & Phoenix Academy | Navitas Australia | Perth Education City | Queensland University of Technology | RMIT University | Swinburne University of Technology | The Australian National University (ANU) | The University of Adelaide | The University of Melbourne | The University of New South Wales | The University of Queensland | The University of Western Australia | University of South Australia | University of Southern Queensland | University of Tasmania | University of Technology Sydney & UTS : Insearch | University of the Sunshine Coast | University of Western Sydney | University of Wollongong.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us