சிறுபான்மை கல்லூரிகளின் தகுதி குறித்து ஆய்வு | Kalvimalar - News

சிறுபான்மை கல்லூரிகளின் தகுதி குறித்து ஆய்வுபிப்ரவரி 08,2013,08:04 IST

எழுத்தின் அளவு :

சென்னை: "முதுகலை சிறுபான்மை மொழி ஆசிரியர் நியமன பட்டியல், மூன்று தினங்களில் வெளியாகும். விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்" என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம்:

..., ஜவாஹிருல்லா: சிறுபான்மை கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் அதிகம் இருந்தும், நிரப்பப்படாமல் உள்ளது.

அமைச்சர் பழனியப்பன்: சிறுபான்மையினர் கல்லூரிகளில், 3,120 காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அப்பணியிடங்கள் எந்த வகைகளில் காலியானவை என்பது குறித்து, மண்டல அளவில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன் அந்த கல்லூரிகள், சிறுபான்மை தகுதியை தொடர்ந்து தக்க வைத்துள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜவாஹிருல்லா: ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 21 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், உருது, தெலுங்கு, மலையாளம் வழி, இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, தேர்வு பெற்றவர்களுக்கு இன்னும் நியமன உத்தரவு அளிக்கப்படவில்லை.

அமைச்சர் சிவபதி: சிறுபான்மை மொழி ஆசிரியர்களை பொறுத்தவரை, ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட, 69 தெலுங்கு, 21 கன்னடம், 24 உருது மற்றும் ஐந்து மலையாளம் என, 119 இடைநிலை ஆசிரியர்கள், 70 தெலுங்கு, 20 மலையாளம், ஒன்பது உருது மற்றும் மூன்று கன்னடம் என, 102 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முதுகலை ஆசிரியர்கள், 20 பேருக்கான பட்டியல், அடுத்த மூன்று தினங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் விரைவில் அவர்களும் பணியமர்த்தப்படுவர். இவ்வாறு விவாதம் நடந்தது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us