10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு | Kalvimalar - News

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்புபிப்ரவரி 08,2013,07:48 IST

எழுத்தின் அளவு :

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வை, இம்மாதம், 20ம் தேதி முதல், 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிவிப்பு: மார்ச் மாதம் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, நேரடி தனி தேர்வராக எழுதும் மாணவ, மாணவியர், அறிவியல் பாட செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்ட பள்ளிகளிலேயே நடக்கும் செய்முறைத் தேர்விலும் பங்கேற்க வேண்டும்.

செய்முறைத் தேர்வுகள், இம்மாதம், 20ம் தேதி மதல், 28ம் தேதி வரை, சனிக்கிழமை உட்பட, அனைத்து வேலை நாட்களிலும், காலை, மாலை என, இரு வேளைகளிலும் நடக்கும். இதற்கான, ஹால் டிக்கெட்டை, சம்பந்தபட்ட, மாவட்ட கல்வி அலுவலர்களிடம், இம்மாதம், 18ம் தேதி முதல், 20ம் தேதி வரை, பெற்றுக் கொள்ளலாம்.

செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டதற்கான, செய்முறை நோட்டு புத்தகத்தை, செய்முறைத் தேர்வு மையத்தில், காட்ட வேண்டும். புகைப்படத்துடன் கூடிய, ஹால் டிக்கெட் பெறும் தேர்வர் மட்டுமே, எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் பயிலும், 10 லட்சம் மாணவ, மாணவியருக்கான செய்முறைத் தேர்வு தேதி குறித்து, அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதுகுறித்து, இயக்குனர் கூறுகையில், "பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், மேற்கண்ட தேதிகளில் தான், செய்முறைத் தேர்வு நடக்கும்" என, தெரிவித்தார்.


வாசகர் கருத்து

இது கால தாமதமான அறிவிப்புதான்,இருந்தாலும் பரவாயில்லை. நன்றி.
by த.ஜான்சன்,India    08-பிப்-2013 12:58:17 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us