சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும், சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கான ஓய்வு பெறும் வயது, 65 ஆக இருந்தது. இதனை, 70 ஆக உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, சில பல்கலைக் கழகங்களில், ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது.
இந்த வகையில், மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு இணையாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் ஓய்வுபெறும் வயது, 65ல் இருந்து, 70 வயதிற்கு உயர்த்தும் வகையில் சட்டம் திருத்தப்படுகிறது.
இதுகுறித்த, சட்ட திருத்த மசோதாவை, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டசபையில் தாக்கல் செய்தார்.
நமக்கு பெரியவர்களின் வழிகட்டுதல் அவசியம் அதனல அரசின் உதவியில் செயல்படும் அனைத்து நிர்வாகத்திலும் இப்படி 70 வயதுக்கு உள்ளவர்களை கொண்டு எதையும் சாதிக்க முடியாது ,வெள்ளைக்காரர்கள் நமக்கு கொடுத்த நிர்வாகத்திறமை உள்ள வயது 58 மட்டுமே அதன் பிறகு நீங்கள் எதையும் துல்லியமாக நினைக்கும் ஆற்றலும் நிர்வாகத்திறமையும் வளராது ,உலகப்பணக்காரர் பில்கேட்ஸ் கூட தனது 63 வயதில் தனது மைக்ரோசாப்ட் காபனி நிர்வாகத்தை வயது குறைதவரிடம் கொடுத்துள்ளார் ஏன்,கவர்னருக்கு வயது அதிகம் தேவை ஆனால் துணை வேந்தர்களுக்கு எதற்கு அதிக வயது தேவை .
|
by sethu,India 2/7/2013 4:35:11 PM IST |