ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங் | Kalvimalar - News

ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்பிப்ரவரி 07,2013,07:22 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: "நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், பொன் விழா கொண்டாட்ட விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.

கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.


வாசகர் கருத்து

ஆசிரியர்களின் திறனை விமர்சிக்கும் நீங்கள் உங்களின் பதவியின் பொறுப்பை உணர்ந்து திறமையாக அரசால்கிறீர்களா என கவனிக்கவும்.
by ramalingam,India    08-பிப்-2013 04:47:52 IST
ஆசிரியர்களுக்காது திறன் உள்ளது, அது கவலை அளிக்கிறது. உங்களுக்கு எதுவுமே இல்லியே.. அதுக்கு நாங்க என்ன பன்ன முடியும் ? நாட்ட விட்டா போக முடியும்? யோசிச்சு பேசுங்க சார்....
by sangeetha,India    07-பிப்-2013 22:00:56 IST
அரசியல்வாதிகளின் கையில் நாடு, வாத்தியார்களின் கையில் கல்வி, மாணவர்களின் கையில் சினிமா டிக்கெட், மக்களின் கையில் சாராய பாட்டில், எம தர்மா சுருட்டிவிடடா ஒரு சுனாமியை தாங்க முடியலையப்பா தாங்க முடியலை
by சிறீதரன்,India    07-பிப்-2013 21:59:40 IST
பாவம் அவரு பொதுவாக சொன்னாரு யாரும் அதை thavaraga எடுக்க வேண்டாம் அவரு வழக்கம் போல அறிக்கைய வாசிச்ச உடனேயே உதவியலரைப் பார்த்து சரியாக வாசித்தேன என உருதிப்படுத்திக் kolvar. சரி இல்லை என உதவியாளர் சொல்லிட்டா அப்போ இதை வாசிக்க ( வேரு பிரதமர் போட்டுடுவாங்களே ) அதனாலதான் அவரு எப்போதும் கவலைப்படுவாறு ,இது ஒன்றுதான் அவருக்கு சுதந்திரமாக செய்ய அனுமதி அதனால விட்டுவிடுங்கள் .இருந்தாலும் அவரு ரொம்ப நல்லவரு.
by sethu,India    07-பிப்-2013 16:27:16 IST
உங்க திறன் எங்களுக்கு கவலை அளிக்கிறது
by அய்யாதுரை,India    07-பிப்-2013 13:25:23 IST
எங்களுக்கு உங்களை கண்டாலே பயமா இருக்கு. எப்ப என்ன செய்வீர்கள் என்றே தெரியவில்லை ?
by செல்வா ,India    07-பிப்-2013 12:47:25 IST
உங்களோட திறமைய நினச்சா அதவிட ரொம்ப கவலையா இருக்கே
by குருநாதன்,Indonesia    07-பிப்-2013 11:28:27 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us