தொழில்துறை(இன்டஸ்ட்ரியல்) இன்ஜினியரிங் படிப்பு, புரொடக்ஷன் இன்ஜினியரிங், மேனுபாக்சர் இன்ஜினியரிங், சிஸ்டம் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியது.
இத்துறையில் உள்ள படிப்புகளின் பாடத்திட்டம், இன்றைய தொழிற்சாலைகளின் தேவைகளை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இத்துறை வல்லுனர்கள், இன்டஸ்ட்ரியல் இன்ஜினியர்ஸ் என அழைக்கப்படுவர்.
பி.இ.,/பி.டெக்., எம்.இ.,/எம்.டெக்., முதுநிலை டிப்ளமோ படிப்புகள் இத்துறையின் கீழ் வழங்கப்படுகின்றன. பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். முதுநிலை படிக்க விரும்புவோர், இத்துறை தொடர்பான இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், மும்பை
* பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கோவை
* தியாகராஜர் இன்ஜினியரிங் கல்லூரி, மதுரை
* எஸ்.ஆர்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, சென்னை
* குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை
* தயானந்த சாகர் இன்ஜினியரிங் கல்லூரி, பெங்களூரு
* பெங்களூரு தொழில்நுட்ப கல்வி நிறுவனம், பெங்களூரு
வேலை வாய்ப்பு
இத்துறையில் பட்டம் பெற்றவர்கள், உற்பத்தித் துறை நிறுவனங்களில் பணியில் அமரலாம். அரசு சார்ந்த உற்பத்தி நிறுவனங்களிலும் வாய்ப்பு உண்டு. முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வெளிநாடுகளில் எளிதில் பணியில் அமரலாம். இத்துறையில் பணிபுரிபவர்களுக்கு அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் அதிகபட்ச ஊதியம் கிடைக்கும்.