பொறியியல் படிப்புகள் - நமது விருப்பம் எது? | Kalvimalar - News

பொறியியல் படிப்புகள் - நமது விருப்பம் எது?

எழுத்தின் அளவு :

பொறியியல் என்பது, தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, கணிதத்தையும், அறிவியலையும் இணைத்து, நடைமுறை ரீதியாக பயன்படுத்துவதாகும். நமது பணிகள், தகவல்தொடர்பு முறைகள், ஆரோக்கிய நல்வாழ்வு, பயணம் மற்றும் பொழுதுபோக்கு போன்ற வாழ்வின் அனைத்து அம்சங்களையும், பொறியியல் தொழில்நுட்பமானது மாற்றிவிட்டது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு பொருளின் இயக்கத்தை சிறப்பாகவும், விரைவாகவும், செலவு குறைவானதாகவும் மாற்றுபவர்களே பொறியாளர்கள் ஆவர்.

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு, பள்ளி மேல்நிலைப் படிப்பில், கணிதத்துடன், இயற்பியில், வேதியியல் போன்ற பாடங்களையும் படித்திருக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான சேர்க்கை, அண்ணா பல்கலையால் கவுன்சிலிங் மூலமாக நடத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பொதுவாக மே முதல் வாரத்தில் வழங்கப்படுகின்றன மற்றும் கவுன்சிலிங் ஜுன் இறுதி மற்றும் ஜுலை முதல் வாரத்தில் துவங்குகின்றன.

கட்-ஆப் என்பது மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படுகிறது. 100 மதிப்பெண்கள் கணிதத்திற்கும், தலா 50 மதிப்பெண்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும் கணக்கிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 540க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், முதன்மையான 40 கல்லூரிகளில் ஒன்றில் இடம்பிடிக்க, 188/200 கட்-ஆப் பெற வேண்டும்.

பொறியியல் துறையைப் பொறுத்தவரை, முதல்நிலைத் தேர்வுகளாக, மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலகட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிக்கல், டெக்ஸ்டைல், விவசாயம், பயோ மெடிக்கல், பயோடெக்னாலஜி மற்றும் ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் போன்ற துறைகள் உள்ளன.

இவைத்தவிர, இரண்டாம் நிலைத் தேர்வுகளாக, ஆட்டோமெபைல், மெட்டலர்ஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஜியோ இன்பர்மேடிக்ஸ், மேனுபேக்சரிங், இண்டஸ்டிரியல், பேஷன், மெக்கட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல், புட் ப்ராஸசிங் டெக்னாலஜி, மெட்டீரியல் சயின்ஸ், லெதர் டெக்னாலஜி, பெட்ரோலியம் அண்ட் ரீபைனிங், ஏரோநாடிகல், ப்ரொடக்ஷன், எலக்ட்ரோகெமிக்கல், ரோபோடிக்ஸ் அண்ட் ஆடோமேஷன், பார்மசூடிகல், மைனிங், மெடிகல் எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் டெக்னாலஜி, மெரைன், பாலிமர் டெக்னாலஜி, பிரிண்டிங் டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி போன்ற படிப்புகள் உள்ளன.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us