அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடுஜனவரி 31,2013,07:37 IST
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரியில், 2012ம் ஆண்டு நவம்பரில் தேர்வு எழுதியவர்களின், முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவில், பி.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், மண்ணியல், உயிர் தொழில் நுட்பவியல், மனை அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், கணினி அறிவியல் மாலை நேரம், மென் பொருளியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியில் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், உயர் விலங்கியல் மற்றும் விலங்கு தொழில் நுட்பவியல், விலங்கியல் - தொழிலக நுண்ணுரியியல்), பி.சி.ஏ.,ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாணவர்கள், www.alagappauniversity.ac.in. www.kalvimalar.com, என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடலாம். முடிவு வெளியான 10 தினங்களுக்குள், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம், பல்கலைகழக இணையதளத்தின் மூலம் பெற்று, கட்டணமாக, பாடம் ஒன்றுக்கு ரூ.225 வரைவோலை செலுத்தி, தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, தேர்வாணையர் உதயசூரியன் தெரிவித்துள்ளார்.