பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் அமைக்க முதல்வர் உத்தரவு | Kalvimalar - News

பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் அமைக்க முதல்வர் உத்தரவுஜனவரி 28,2013,17:10 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி ஆகிய இடங்களில், அரசு சார்பில் புதிய பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றுக்கு, ரூ.179.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக, ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ.14.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மதுரை, திருச்சி, தேனி மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், மொத்தம் 10 பாலிடெக்னிக்குகள் அமைக்க ரூ.138 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்மைத் துறையை இயந்திரமயப்படுத்தும் அரசின் முயற்சியை மேம்படுத்தும் வகையில், 300 கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சியளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, கோவை, மதுரை, வேலூர், திருச்சி, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறைகளின் டிப்போக்களில் தலா 50 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க, தலா ரூ.42.90 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

புதிய கல்லூரிகளிலும் இந்நிலைமை நீடிக்குமா? தமிழகமெங்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் நிலவும் கடும் ஆசிரியர் பற்றாக்குறையால், வகுப்புகள் நடப்பதே அரிதாக உள்ளது. தேர்வுகள் நெருங்கி வரும் நேரத்தில், வாரத்திற்கு 20 மணிநேர வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
by arun,India    1/28/2013 10:19:47 PM IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us