ஆசிரியர்கள் பயன்படுத்தும் சிவப்பு இங்க் - மாணவர்களுக்கு ஆகாதாம்... | Kalvimalar - News

ஆசிரியர்கள் பயன்படுத்தும் சிவப்பு இங்க் - மாணவர்களுக்கு ஆகாதாம்...ஜனவரி 19,2013,14:32 IST

எழுத்தின் அளவு :

லண்டன்: ஆசிரியர்கள் பயன்படுத்தும் சிவப்பு இங்க் அல்லது மை, மாணவர்களின் மனோநிலையை பாதிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க, ஆசிரியர்கள் பயன்படுத்தும் சிவப்பு மை அல்லது இங்க், மாணவர்களை மனோரீதியாக பாதிப்பதாக கொலராடோ பல்கலையில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிவப்பு மையை பார்க்கும் மாணவர்கள், தாங்கள் மிகவும் கடுமையான முறையில் மதிப்பிடப்படுகிறோம் என்று உணர்கிறார்களாம். அதேசமயத்தில், வழக்கமாக பயன்படுத்தப்படும் நீள மை, அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதில்லையாம்.

இப்பிரச்சினையால், ஆசிரியர் - மாணவர் உறவு பாதிப்படைவதோடு, மாணவர்களின் கற்றல் திறனும் பாதிப்படைகிறதாம். ஏனெனில், பொதுவாக சிவப்பு நிறம் என்பது, எச்சரிக்கை, தடை, கோபம், தர்மசங்கடம் உள்ளிட்ட பண்புகள் மற்றும் அம்சங்களை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

let us wait and see how our society reacts for this
by francis,India    20-ஜன-2013 08:45:52 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us