அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் எவை? | Kalvimalar - News

அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் எவை?ஜனவரி 19,2013,12:19 IST

எழுத்தின் அளவு :

சென்னை: தன்னுடன் இணைப்பு பெற்றுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை, தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மாணவர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு பெறாத மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எந்தப் பதிவும், எந்தத் தேர்வும் நடத்தப்படாது. www.tnmgrmu.ac.in என்ற பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் பெயர்கள்

* தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்
* கிறிஸ்டியன் மெடிக்கல் காலேஜ் - வேலூர்
* பி.எஸ்.ஜி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - கோவை
* ஐ.ஆர்.டி பெருந்துறை மெடிக்கல் காலேஜ் - பெருந்துறை
* ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - கன்யாகுமரி
* மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் - மேல்மருவத்தூர்
* கற்பக வினாயகா இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் சென்டர் - காஞ்சிபுரம்
* சென்னை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் சென்டர் - திருச்சி
* ஸ்ரீ முத்துக்குமரன் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் - மாங்குடி(அருகில்).
* தனலட்சுமி சீனிவாசன் மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - பெரம்பலூர்
* அன்னபூர்ணா மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் - சென்னை
* கற்பகம் பேகல்டி ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் - கோயம்புத்தூர்.


வாசகர் கருத்து

ramachandra medical college is not there in mgr university list. The official info can be found here :.mciindia.org/InformationDesk/MedicalCollegeHospitals/ListofCollegesTeachingMBBS.aspx
by rajaguru,India    19-ஜன-2013 10:42:02 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us