கேட் தேர்வு முடிவுகள் - 10 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்! | Kalvimalar - News

கேட் தேர்வு முடிவுகள் - 10 மாணவர்கள் 100% மதிப்பெண்கள்!ஜனவரி 10,2013,15:10 IST

எழுத்தின் அளவு :

சென்னை: 2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம் 10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 10 மாணவர்களில், மொத்தம் 9 பேர் ஐஐடி.,களை சேர்ந்த பொறியியல் மாணவர்கள். ஒருவர், டெல்லி பல்கலையை சேர்ந்தவர். 100% பெற்றவர்களில் 5 பேர், இன்னும் இறுதியாண்டு நிறைவு செய்யவில்லை.

மாணவிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 4 பேர் 99.99% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒடிசா, உத்திரபிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தற்போது இறுதியாண்டு மாணவிகள். மொத்தம் 255 மாணவர்களும், 1,640 மாணவர்களும் 99%க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

பல ஐஐஎம்.,கள், பொறியியல் சாராத மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல் பாயின்டுகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன்மூலம், வகுப்பறைகளில், ஒரு நல்ல கலப்பு சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு அவை செயல்படுகின்றன.

கேட் தேர்வை, கடந்த 2012ம் ஆண்டு, அக்டோபர் 11 முதல் நவம்பர் 6 வரையிலான தேதிகளில், மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 642 பேர் எழுதினர் என்பது நினைவுகூறத்தக்கது.


வாசகர் கருத்து

How many students from Tamilnadu have cleared the exams ?
by Ilango,India    10-ஜன-2013 14:24:46 IST
வாழ்த்துகள்
by விஜய்,India    10-ஜன-2013 12:49:08 IST
எவ்வளவு அசிங்கங்கள் இருந்தாலும் இது போன்ற நல்லவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. வாழ்த்துக்கள். ஆனால், நன்றாக படித்த சிலர்களும் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதும் தற்போது உள்ளது. (ஒரு IIT மாணவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டது) இதை பார்க்கும்போது, கெட்டவை வளர்வதைபோல் நல்லவைகளும் வளர்கின்றன என்று தெரிகிறது. நல்லவை அதிகமாகவும் கெட்டவை குறைவாகவும் வளர்ந்தால் சரி.
by இளங்கோ,India    10-ஜன-2013 07:13:54 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us