எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான எல்.ஐ.சி. பணி | Kalvimalar - News

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான எல்.ஐ.சி. பணிஜனவரி 09,2013,15:43 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவில் இயங்கி வரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் முதன்மையானதும், அதிகளவு சந்தைப் பங்குகளைத் தன்னகத்தே கொண்டுள்ள எல்.ஐ.சி., எனப்படும் லைப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தைப் அறியாதவர்களே இருக்க முடியாது.

உலக அளவில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து புரிந்து வரும் எல்.ஐ.சி., நிறுவனத்தில் கிட்டத்தட்ட 25 கோடி பாலிசிதாரர்கள் உள்ளனர். இந்தியா எங்கும் கிளைகளைக் கொண்ட எல்.ஐ.சி., நிறுவனத்திற்கு சர்வதேச நாடுகளிலும் கிளைகள் இருப்பது மற்றொரு சிறப்பு.

பல ஆண்டுகளாக கிளரிக்கல் பிரிவு காலி இடங்களில் எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருந்த இந்த நிறுவனத்தில் தற்போது எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான சிறப்பு பணி நியமனங் களின் மூலம் தென் மண்டலத்தில் உள்ள 84 உதவியாளர் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள் என்னென்ன?

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். எல்.ஐ.சி., நிறுவனத்தின் கோட்ட வாரியாக இந்த காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.12.2012 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

அதாவது 02.12.1977க்கு பின்னர் பிறந்தவராகவும், 01.12.1994க்கு முன்னர் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நிலையிலேயே எந்தக் கோட்டத்திற்கான காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கிறோம் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கோட்டத்தை மாற்ற முடியாது.

இந்தப் பதவிகளுக்கு தேர்ந்து எடுக்கப்பட 17.02.2013 அன்று நடத்தப்பட உள்ள 2 பிரிவுகளிலான எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். முதல் பிரிவில் அப்ஜெக்டிவ் வகையில் நியூமரிகல் எபிலிட்டி, ரீசனிங் எபிலிட்டி, பொது அறிவு, இங்கிலீஷ் லாங்வேஜ் ஆகிய பகுதிகளிலிருந்தும், 2வது பிரிவில் ஆங்கில சுருக்கி எழுதுதல், கடிதம் எழுதுதல் மற்றும் தமிழில் கட்டுரை எழுதுதல் ஆகிய பகுதிகளிலிருந்து கேள்விகள் இருக்கும். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.

மற்ற விபரங்கள்

எல்.ஐ.சி., நிறுவன உதவியாளர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலுõர் ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவத்தை பின்வரும் இணையதளத்தில் Careers என்ற பகுதிக்கு சென்று டவுன்லோடு செய்து பெறலாம்.

முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் பத்தாம் வகுப்பு, ப்ளஸ்2,  பட்டப் படிப்பு மதிப்பெண் சான்றுகள், ஜாதிச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்கள், ரூ.5/ ஒட்டப்பட்ட சுயவிலாசமிட்ட கவர், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்றவற்றை இணைத்து எந்தக் கோட்டத்திற்கு விண்ணப்பிக்கிறோமோ, அந்தக் கோட்ட அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 17.01.2013
இணையதள முகவரி: www.licindia.in

* எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
* தேர்வில் 2 தாள்கள் உண்டு. முதல் தாள் அப்ஜக்டிவ் வகை. கணிதம்,
ரீசனிங், பொது அறிவு, ஆங்கிலம் ஆகியவற்றில் கேள்விகள் இடம் பெறும்.
* 2ம் தாளில் ஆங்கிலத்தில் சுருக்கி வரைதல், கடிதம் வரைதல் மற்றும் தமிழில் கட்டுரை எழுதுவது ஆகியவை இடம் பெறும்.
* தனித்தனியாக இவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
* இதில் தேர்ச்சி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
* தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி, வேலுõர் மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்படும்.
* எந்த கோட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த கோட்ட அலுவலகத்திற்கே விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us