டிரேடு அப்ரெண்டிஸ் ஆகலாமா? | Kalvimalar - News

டிரேடு அப்ரெண்டிஸ் ஆகலாமா?ஜனவரி 09,2013,15:36 IST

எழுத்தின் அளவு :

1972ல் துவங்கப்பட்ட ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு ஐ.எஸ்.ஓ., 9001:2000 நிறுவனம்.

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இது அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி

இடங்கள்: ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு அப்ரெண்டிஸ் பதவிகள் இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏர் கண்டிஷனர், மெஷின்ஸ்ட் கிரைண்டர் ஆகிய பிரிவுகளில் தலா இரண்டும், டூல் அண்டு டை மேக்கர், ஷீட் மெட்டல் ஒர்க்கர் மற்றும் டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக் பிரிவுகளில் தலா 4ம், பவுண்டரிமேன், பெயிண்டர் ஆகிய பிரிவுகளில் தலா 5ம், மெஷின்ஸ்ட் பிரிவில் 10ம், பிட்டர் மற்றும் எலக்ட்ரீசியன் பிரிவுகளில் தலா 12ம், டர்னர் பிரிவில் 14ம், வெல்டர் பிரிவில் 16ம்,மெக்கானிக் மோட்டார் வெகிக்கிள், மெக்கானிக்  டீசல் ஆகிய பிரிவுகளில் தலா 20ம் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: மேற்கண்ட ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு வருட கால ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.

ஏனைய தகவல்கள்: ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு அப்ரெண்டிஸ் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு 25.01.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முதலில் இணைய தளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

முகவரி
Dy. Manager (HR),
Scooters India Limited,
Sarojini Nagar PO,
Lucknow - 226008
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 25.01.2013

இணையதள முகவரி: www.scootersindia.com/html/
rect_trade_appr_1314.pdf


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us