மருத்துவ துறையில் வேலை! | Kalvimalar - News

மருத்துவ துறையில் வேலை!ஜனவரி 09,2013,15:34 IST

எழுத்தின் அளவு :

எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் அரசுத் துறை சார்ந்த ஒரு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பல்வேறு மையங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் மருத்துவம் சார்ந்த பதவிகளான லேப் அஸிஸ்டெண்ட், ஜூனியர் ரேடியோகிராபர், அலோபதிக் பார்மஸிஸ்ட், ஸ்டாப் நர்ஸ் போன்ற காலி இடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன.

தற்போது மும்பை மையத்தில் உள்ள இது போன்ற காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: இ.எஸ்.ஐ.சி.,யில் லேப் அஸிஸ்டெண்ட் பிரிவில் 11 இடங்களும், ஜூனியர் ரேடியோகிராபர் பிரிவில் ஒரு இடமும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பிரிவில் 22 இடங்களும், ஸ்டாப் நர்ஸ் பிரிவில் 44 இடங்களும் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்: லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், ஜூனியர் ரேடியோகிராபர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 27 வயதுக்கு உட்பட்டவ ராகவும், அலோபதிக் பார்மஸிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 37 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

லேப் அஸிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எம்.எல்.டி.,யில் டிப்ளமோ படிப்பும், பார்மஸிஸ்ட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.பார்ம்., பட்டப் படிப்பும், ஸ்டாப் நர்ஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இப்பிரிவில் டிப்ளமோ படிப்புடன் கவுன்சிலில் பதிந்தும் இருக்க வேண்டும்.

பிற தகவல்கள்: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இ.எஸ்.ஐ.சி.,யின் காலி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி ரூ.125/ அல்லது ரூ.225 -ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளத்திலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு 25.01.2013க்குள் கிடைக்குமாறு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No: 8709, Andheri East, Mumbai  - 400 069.
ஆன்லைன் பதிவு செய்ய இறுதி நாள்: 16.01.2013
இணையதள முகவரி: www.esic.nic.in/Recruitment/rec_mum281212.pdf


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us