வங்கித் துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்பு | Kalvimalar - News

வங்கித் துறையில் ஒரு லட்சம் பேருக்கு பணி வாய்ப்புஜனவரி 09,2013,10:28 IST

எழுத்தின் அளவு :

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில் மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.

மற்ற பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 20 ஆயிரம் எழுத்தர் பணியிடங்களுக்கு ஊழியர் தேர்வு நடைபெற உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கூடுதலாக 22 ஆயிரம் அதிகாரிகளும் தேர்வு செய்யப்பட இருப்பதாக வங்கித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4 முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன.

எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


வாசகர் கருத்து

please tell the date
by சதிஷ்குமார்.p,India    09-ஜன-2013 08:30:02 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us