சென்னை: தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள் பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இந்த ஆண்டு முதல், தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, உதவித்தொகை அளிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, வருடம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
தேர்வில், 1167 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், 1168 பெற்ற மாணவியர், மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் கல்லூரியில் படிக்கும் சான்றிதழ்களுடன், அவர்கள் பிளஸ் 2 படித்த மாவட்டத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
ஜாதி மதம் இல்லை என படிக்கும் புத்தகத்தில் மட்டும் எழுதிவிட்டு... இப்படி மாணவர்களை வேறுபடுத்தி வைப்பது கேவலம். நன்கு படித்த அணைத்து மாணவர்களையும் பாராட்ட வேண்டும். வரி வாங்கும் போது அனைவரிடமும் வாங்குறீங்க இல்ல.
|
by கெல்வின்,India 1/9/2013 1:16:50 PM IST |
1167 மார்க்கிற்கு உதவித்தொகை அரசாணை எண் என்ன ?
|
by பாலசந்தர்,India 1/9/2013 10:07:09 AM IST |
நாசமா போச்சு,அது என்ன உதவி தொகை ஜாதி வாரியாக கொடுப்பது, 1167 மார்க் எடுத்த எல்லா மாணவர்களுக்கும் கொடுக்கவேண்டியது தானே. இது குறிப்பிட்ட ஜாதி மாணவர்களின் எதிர்கால ஓட்டுக்களை குறிவைத்து செய்வது போலவும், அ.தி.மு.க. குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே சொந்தம் போலவும் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர். சாதியைப்பற்றி அதிகம் பேச தேவையில்லை என்று கூறியவர். இவர்களோ ஜாதியைவைத்து அரசியல் செய்பவர்கள். எங்க உருபடப்போகுது நம்ம நாடு.
|
by Sivakumar,India 1/9/2013 9:41:50 AM IST |